Home இந்தியா முன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்!

முன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்!

என்.டி.திவாரி மகன் கொல்லப்பட்ட வழக்கில் அவர் மனைவி அபூர்வா அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதுடெல்லி:  என்.டி.திவாரி மகன் கொல்லப்பட்ட வழக்கில் அவர் மனைவி அபூர்வா அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதல்வராக  இருந்தவர் என்.டி.திவாரி.இவரது மகன் ரோகித் சேகர் திவாரி, அபூர்வா என்பவரைத் திருமணம் செய்த கொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒரே வீட்டில் இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி ரோகித் சேகர் திவாரி மூக்கில் ரத்தம் வழிந்து மயங்கி விட்டதாக அவரது அம்மா உஜ்வா லாவுக்கு போன்  சென்றது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

TIWARI

இதையடுத்து ரோகித்  உடல், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை  அறிக்கையில், ரோகித் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. அவர் மரணம் இயற்கையானது அல்ல என்றும்  மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளதால் இதைக் கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

TIWARI

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரோகித்துக்கு அபூர்வாவிடம் இருந்து வீடியோ கால் வந்துள்ளது. வேலைக்காரப் பெண், அந்த வீடியோ அழைப்பை ரோகித்திடம் கொடுத்துள்ளார். இதையடுத்து ரோகித் மயக்கம் அடைந்த சமயத்தில், வீட்டில் ரோகித் மனைவி அபூர்வா, உறவினர் சித்தார்த் மற்றும் வேலைக்காரப் பெண் வீட்டிலிருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ரோகித் மனைவி அபூர்வாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்ததால் போலீசாருக்கு அவர் மீது  சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு குற்றப் புலனாய்வு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது. 

TIWARI

இது குறித்து ரோகித் திவாரியின் அம்மா உஜ்வா லாவோ , அபூர்வா ரோகித்தை திருமணம் செய்து கொள்ளும் முன் , வேறொருவருடன் பழகிவந்தார். எங்கள் சொத்து மீது அபூர்வா குடும்பத்துக்கு ஆசை இருந்தது. அதை அபகரிக்க முடிவு செய்தனர். இது குறித்த உண்மையை விரைவில் வெளியிடுவேன்’ என்றார். 

 

இந்நிலையில் ரோகித் சேகர் திவாரியின் மனைவி  அபூர்வா இன்று குற்ற புலனாய்வு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்துக் கூறியுள்ள டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தரப்போ, ரோகித்தின் குடிப்பழக்கத்தால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் அபூர்வா இருந்துள்ளார். அதனால் இந்த குற்றச் சம்பவம் நடந்துள்ளது. அபூர்வா கடந்த 16 ஆம் தேதி ரோகித்தின்  அறைக்குள் நுழைந்து அவரை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். மேலும் இது குறித்த தடயங்களை ஒன்றரை மணிநேரத்தில் அவர் அழித்துள்ளார். இவை அனைத்தும் போலீசாரை திசை திருப்ப அவர் செய்தது. ஆனாலும் தடய அறிவியல் சோதனை மூலம் அவர் சிக்கிக் கொண்டார். விரைவில் அபூர்வா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்’ என்று கூறியுள்ளது. 

இதையும் வாசிக்க: வேலைக்காரரின் உணவை சாப்பிட்ட தந்தை: கத்தியால் குத்தி கொலை செய்த மகன்; அதிர்ச்சி ரிப்போர்ட்!

மாவட்ட செய்திகள்

Most Popular

உச்சத்தை தொட்ட வெங்காய விலை : கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு...

தமிழகத்தில் பரவலாக பலத்த மழை !

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து...

கோழிப்பண்ணையில் தீ விபத்து : தீயில் கருகிய கோழிகள்!

பொன்னேரி பகுதியில் கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மெதூர்...

’கொளுத்தி போடுவதில் சுரேஷே பொறாமை படும் ஆள் இவர்தான்’- பிக்பாஸ் 15-ம் நாள்

சுயமுகத்தைக் காட்ட தயங்கிக்கொண்டிருந்தவர்களை உசுப்பேத்த டபுள் மடங்காகக் கொட்டியதும், ஆரியிடம் ஒட்டுமொத்த வீட்டுக்கும் பிடிக்காத ஒரு குணம் எவிக்‌ஷனில் வெளிப்பட்டதும் கொசுறாகச் சின்ன சண்டையுமாகச் சென்றது பிக்பாஸ் 15 –ம்...
Do NOT follow this link or you will be banned from the site!