Home அரசியல் முன்னாள் குடியரசுத் தலைவர் குடும்பம் பாதிக்கப்பட்டபோது ரஜினி போராடாதது ஏன்?

முன்னாள் குடியரசுத் தலைவர் குடும்பம் பாதிக்கப்பட்டபோது ரஜினி போராடாதது ஏன்?

நடிகர் ரஜினிகாந்த்க்கு என்.ஆர்.சி பற்றிய புரிதல் இல்லை, இஸ்லாமியர்களுக்காகப் போராடுவேன் என்ற ரஜினி முன்னாள் குடியரசுத் தலைவர் குடும்பம் பாதிக்கப்பட்டபோது போராடாதது ஏன் என்று தி.மு.க-வைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்க்கு என்.ஆர்.சி பற்றிய புரிதல் இல்லை, இஸ்லாமியர்களுக்காகப் போராடுவேன் என்ற ரஜினி முன்னாள் குடியரசுத் தலைவர் குடும்பம் பாதிக்கப்பட்டபோது போராடாதது ஏன் என்று தி.மு.க-வைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

p

நாகை மாவட்டம் பொறையாரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொறையாறு வந்த பிரசன்னாவிடம் நிருபர்கள் பேசினர். அப்போது அவர், “மத்திய அரசு எப்படி செயல்படுகிறது என்பதை டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது. ஆனாலும் பிரதமர் மோடி தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்துவது உள்ளிட்ட மக்களை அச்சுறுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

balaji

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க-வா அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிமையா என்ற கேள்வி எழுகிறது. அவர் ரஜினியையும் ஆதரிக்கிறார், பொன்.ராதாகிருஷ்ணனையும் ஆதரிக்கிறார். அ.தி.மு.க ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அவரை சிவகாசி மக்களே அடித்து விரட்டுவார்கள். அப்போது அவர் உடனடியாக பா.ஜ.க-வில் சேர்வார். அதற்காகத்தான் பா.ஜ.க-வில் இப்போதே துண்டு போட்டு வைத்துள்ளார்.

ra

நடிகர் ரஜினிகாந்த்துக்கு என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவை குறித்த புரிதல் இல்லை. இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு என்றால் தாம் வந்து போராடுவதாக ரஜினி கூறுகிறார். ஆனால் இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் பக்ருதீன் அலி அகமது பேரன், அசாமின் முதல் பெண் முதலமைச்சர், கார்கில் போரில் வாழ்க்கையை இழந்த ராணுவ வீரன் ஆகியோர் குடியுரிமை அற்றவராக இருக்கிறார்கள். அசாமில் உள்ள தலைவர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புரிதலோ சிந்தனையோ ரஜினிக்குக் கிடையாது. ஆகையால் நடிகரை நடிகராக மட்டுமே பார்க்க வேண்டும். ரஜினிக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது” என்றார்.

Most Popular

“கட்டிலுக்கு வந்து தொட்டில் கட்டிட்டியே” -சண்டை போட்ட சின்னவீட்டை சிதைத்த வாலிபர்

ஒருவர் தன்னுடைய சின்னவீட்டு பெண்னோடு தாலியே கட்டாமல் குழந்தையும் பெற்றதால், கோபமுற்று தாலி கட்ட சொன்ன பெண்ணை கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஐபிஎல் தொடரின் நேற்றைய...

கள்ளக்குறிச்சியில் இடி தாக்கியதில் 65 ஆடுகள் உடல்கருகி இறந்தன!

உளுந்தூர்பேட்டையில் இடி தாக்கியதில் ராமச்சந்திரன் என்பவரின் 65 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை ஊ.செல்லூரில்...

“லட்டு மாதிரி பொண்ணுங்கள துட்டு கொடுத்து தூக்கலாம்” -கிளப்பிலிருந்த வந்த போனை நம்பி கிளம்பிப்போனவரின் நிலை.

அழகான பெண்களோடு ஜாலியாக இருக்கலாம் என்று ஒரு டேட்டிங் கிளப்பிலிருந்து வந்த போனை நம்பி போனவரிடம் 15 லட்ச ரூபாய் பணத்தை பறித்துக்கொண்ட கிளப் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!