Home தமிழகம் முதிய தம்பதியினரைத் தாக்கி கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர் கைது....

முதிய தம்பதியினரைத் தாக்கி கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர் கைது….

தமிழக அரசு முதியவர்களின் தைரியத்தைப் பாராட்டி அவர்களுக்குப் பரிசு அளித்தது. 

நெல்லை மாவட்டம் கடையம் அருகே சண்முகவேல், செந்தாமரை தம்பதியினரை வீட்டின் பின்புறத்திலிருந்து வந்த 2 கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கி, வீட்டில் கொள்ளையடிக்க முயன்றனர். கொள்ளையர்களைக் கண்டு பயப்படாமல் அந்த தம்பதியினர் இருவரும் அருகே இருந்த நாற்காலியை வைத்து கொள்ளையர்களை விரட்டியடித்தனர்.

Elderly couple

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணைய தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வைரல் ஆகியது. அதனையடுத்து, தமிழக அரசு முதியவர்களின் தைரியத்தைப் பாராட்டி அவர்களுக்குப் பரிசு அளித்தது. 

TN govt gave award

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில்,  கொள்ளையடிக்க வந்த இருவரில் ஒருவரைக் கண்டு பிடித்து விட்டதாக காவல்துறை தரப்பினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், அந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் பழைய குற்றவாளி என்றும் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையொட்டி அவரது சிலைக்கு...

“வென்டிலேட்டரில் இருந்த பெண்ணை வேட்டையாடிய மிருகம்” -தனியார் மருத்துவமனையில் நடந்த அநியாயம்

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த நபரை...

தேவர் குருபூஜை : மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்...

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தனது பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தனது பங்கினை பாகிஸ்தான் நேற்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2019 பிப்ரவரி 14ம் தேதியன்று...
Do NOT follow this link or you will be banned from the site!