நடிகர் சென்ட்ராயன் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னை: நடிகர் சென்ட்ராயன் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சென்ராயன். பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தாலும் முன்னணி காமெடியன் என்கிற இடத்தை பிடிக்க தற்போது வரை போராடி கொண்டு தான் இருக்கிறார்.
அதையடுத்து கடந்த வருடம் வெளியான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது அதில் தனக்கு குழந்தை இல்லை அதனால் அனாதை குழந்தைகளைத் தத்தெடுக்கப் போவதாகக் கூறியிருந்தார். பின்பு அந்த நிகழ்ச்சி பாதியில் சென்ட்ராயன் மனைவி கயல்விழி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
அதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். தற்போது முதல் முறையாக தன்னுடைய குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.