Home அரசியல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா..!?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா..!?

தமிழகத்தின் நலனுக்காக அமெரிக்கா, துபாய், லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர்  இன்று சென்னை திரும்பினார். இந்நிலையில், எடப்பாடியிடம் எதிர்க் கட்சி தலைவரான மு.க ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுபயணம் குறித்த வெள்ளை அறிக்கை வெளிடயிடப் பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா..!?

தமிழகத்தின் நலனுக்காக அமெரிக்கா, துபாய், லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர்  இன்று சென்னை திரும்பினார். இந்நிலையில், எடப்பாடியிடம் எதிர்க் கட்சி தலைவரான மு.க ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுபயணம் குறித்த வெள்ளை அறிக்கை வெளிடயிடப் பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

CM

முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன;

அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு – செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை; அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை” என்று வெளியிடத் தயாரா?

அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் ‘பாராட்டு விழா’ நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா? இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில் வேண்டும்; இல்லாவிட்டால், முதலமைச்சரின் வெளிநாடுகள் பயணம் மர்மங்கள் நிறைந்தது என்று ஊர் முழுவதும் பேசிக் கொள்வது உண்மைதான் என்று உறுதியாகிவிடும்.

Stalin

சிலரை பலநாள் ஏமாற்றலாம்; பலரைச் சிலநாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்றிவிட முடியாது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மு.க ஸ்டாலின் தங்களது ஆட்சிக்காலத்தில்..2006-2010 தி.மு.க ஆட்சியில் ருபாய். 46,091 கோடி அந்நிய முதலீட்டால் 2.21 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சவாலை ஏற்பாரா முதல்வர் எடப்பாடி..!?.

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா..!?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படுமா? – அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்

கொரோனா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது....

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் அதிகமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் குழு!

இந்தியா முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இது தற்காலிக தீர்வு தான் என்று கூறும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அனைத்து...

கொரோனாவிலிருந்து மீண்டு புதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி!

கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருமணத்திற்கு செல்ல அனுமதி கிடையாது… இ-பதிவு இணையதளத்திலிருந்து நீக்கம்!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய இ-பாஸ் நடைமுறையைப் போல்...
- Advertisment -
TopTamilNews