Home தமிழகம் முதல்வருக்கு எதிராக பேசுவதற்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வருக்கு எதிராக பேசுவதற்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வருக்கு எதிராக பேசவோ, ஆதாரங்களையோ வெளியிட கூடாது என மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சென்னை: முதல்வருக்கு எதிராக பேசவோ, ஆதாரங்களையோ வெளியிட கூடாது என மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களா தொடர்பாக நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

highcourt

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும், முதல்வருக்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பி வருவதாகவும் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

mathew

மேலும், மேத்யூ சாமுவேல் தன்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி, 1.1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், முதல்வருக்கு எதிராக பேசவோ, ஆதாரங்களையோ வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், 7 பேரும் 30 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் கட்டளை பிறப்பித்துள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

“ஆளுநரிடம் வேறு விஷயங்களும் பேசினோம்; அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது” – மு.க ஸ்டாலின்

எழுவர் விடுதலை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன், நளினி, முருகன்...

நிவர் புயல் எதிரொலி – செம்பரம்பாக்கம் ஏரியில் அலைகள் அதிகரிப்பு

சென்னை நிவர் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று அலைகள் அதிகரித்து காணப்பட்டது.

காற்று பலமாக வீசியதால் இந்தியாவில் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்!

நிவர் புயல் குறித்த அப்டேட் செய்திகள் வந்துகொண்டே உள்ளன. நாளை இப்புயல் காரைக்கல் – மாமல்லபுரம் இடையே கரை கடக்கும் என தெரிகிறது. இதனால், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு...

நிவர் புயல் காரணமாக சி.ஏ. தேர்வுகள் ரத்து!

நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் நடைபெற இருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வங்க கடலில் உருவான...
Do NOT follow this link or you will be banned from the site!