முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 334 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருந்தது. சென்செக்ஸ் 334 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கடந்த நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை மந்தமாக இருந்ததால் பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்தது. பொருளாதார வளர்ச்சி குறைந்தது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காதது போன்ற பல காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் சரிவு கண்டது.

கோடக் மகிந்திரா வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், கோடக் மகிந்திரா வங்கி, டாடா ஸ்டீல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், யெஸ் பேங்க், ஸ்டேட் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, இண்டஸ் இந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

யெஸ் பேங்க்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 874 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,650 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது. 184 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.19 லட்சம் கோடியாக சரிந்தது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 334.44 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 40,445.15 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 96.90 புள்ளிகள் குறைந்து 11,921.50 புள்ளிகளில் முடிவுற்றது.

Most Popular

கந்தசஷ்டி அவமதிப்பு : பரிகாரமாக தமிழகம் முழுவதும் இன்று பூஜை நடத்தும் பாஜக!

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலை சேர்ந்தவர்கள் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டனர். அவர்களின் இந்த கொடுஞ்செயலை கண்டித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக...

ஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா நோய்த் தொற்றில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளை விட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கும் செய்தியாகும். இறப்பு விகிதம் குறைவாக...

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...