Home இந்தியா முதலீட்டாளர்களை காப்பாற்றிய பங்கு வர்த்தகம்....ரூ.1.65 லட்சம் கோடி லாபம்......சென்செக்ஸ் 693 புள்ளிகள் உயர்ந்தது...

முதலீட்டாளர்களை காப்பாற்றிய பங்கு வர்த்தகம்….ரூ.1.65 லட்சம் கோடி லாபம்……சென்செக்ஸ் 693 புள்ளிகள் உயர்ந்தது…

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 693 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்காவில் நிதி அமைப்பை நிலையாக வைத்திருக்க தன் சக்திக்கு முடிந்த என்ன நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என அந்நாட்டு மைய வங்கி (பெடரல் ரிசர்வ்) நேற்று இரவு அறிவித்தது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் எந்தவொரு அவசர தேவைகளையும் பூர்த்தி செய்ய நிதி பரிமாற்றத்தில் எந்ததாமதமும் இல்லை என்பதை உறுதி செய்ய நிதி அமைச்சகம் அரசாங்கத்தின் செலவு முறையை ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவித்தது. இந்த தகவல்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், மாருதி இந்துஸ்தான் யூனிலீவர், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்டு மகிந்திரா, இண்டஸ்இந்த் வங்கி, ஐ.டி.சி., பவர்கிரிட் மற்றும் எல் அண்டு டி உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இன்போசிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 923 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,337 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 153 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.103.78 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.65 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 692.79 புள்ளிகள் உயர்ந்து 26,674.03 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 190.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 7,801.05 புள்ளிகளில் முடிவுற்றது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தளர்வுகளுடன் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பாதிப்பு , தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பாதிப்புகள் பதிவாவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன....

உயர் ரத்த அழுத்தம்… அறிகுறிகள் அறிவோம்!

30, 35 வயதைத் தாண்டிவிட்டாலே பி.பி, சுகர் இருக்கா என்று கேட்கத் தொடங்கிவிடுகின்றனர். பி.பி அல்லது ரத்த கொதிப்பு என்று சொல்லப்படும் உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன அதன்...

‘அரசின் அறிவிப்புக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை’ – முதல்வர் திடீர் பேட்டி!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் கோரிக்கைகள் ஒன்றொன்றாக நிறைவேற்றப்படுகிறது. புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை...

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம் : முதல்வர் இரங்கல்!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இருக்கும் கூகூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அம்மாவட்டத்தின் இருவேறு இடங்களில் மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்கியதில், மதுரையை சேர்ந்த வீரர்...
TopTamilNews