Home தமிழகம் முதலமைச்சர் நிவாரண நிதியில் ரூ.134 கோடியே 63 லட்சம் குவிந்தது!

முதலமைச்சர் நிவாரண நிதியில் ரூ.134 கோடியே 63 லட்சம் குவிந்தது!

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியா முழுக்கவே மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், அதிலிருந்து மக்களை காக்க நிவாரண நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன்படி, பல்வேறு நிறுவனங்கள், எம்.எல்.ஏ., எம்.பி, சிறுவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களால் முடிந்த தொகையை அளித்தனர். 

Money

இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை சுமார் 134 கோடியே 63 லட்சம் நன்கொடையாக வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிகளவு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் அளித்த அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்!

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக வருகிற 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. முதல்வர் இன்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை...

எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில்...

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு… சகாபுதீன் உள்பட இருவருக்கு, 5 நாள் போலீஸ் காவல்…

சென்னை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான சகாபுதீன் உள்ளிட்ட இருவரை 5 காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ-வுக்கு, சிறப்பு நீதிமன்றம் அனுமதி...

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்? யார்?

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் தொடர் தற்போது நடந்துமுடிந்துள்ளது. இதையடுத்து...
Do NOT follow this link or you will be banned from the site!