Home தமிழகம் முதலமைச்சர் நிவாரண நிதியில் ரூ.36 கோடியே 34 லட்சம் குவிந்தது!

முதலமைச்சர் நிவாரண நிதியில் ரூ.36 கோடியே 34 லட்சம் குவிந்தது!

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியா முழுக்கவே மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், அதிலிருந்து மக்களை காக்க நிவாரண நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன்படி, பல்வேறு நிறுவனங்கள், எம்.எல்.ஏ., எம்.பி, சிறுவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களால் முடிந்த தொகையை அளித்தனர். 

Money

இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை ரூ.36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 பெறப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

முதிய தம்பதி இரும்பு ராடால் அடித்துக்கொலை… வீடுகட்ட பணம் தராததால் மகன் வெறிச்செயல்…

தருமபுரி தருமபுரி அருகே வீடுகட்ட பணம் தர மறுத்த தாய், தந்தையை இரும்பு ராடால் அடித்துகொன்ற மெக்கானிக்கை போலீசார் கைதுசெய்தனர். தருமபுரி...

“ஆட்டைய கலைங்க; முதல்ல இருந்து ஆரம்பிங்க… மோடி பிரச்சாரத்துக்கு போக கூடாது”

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என ஐந்து மாநிலங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பை கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்கம், அசாம் தவிர்த்து...

வந்தா நல்லது.. காங்கிரஸுக்கு தூது விடும் மக்கள் நீதி மய்யம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் அதிரி புதிரியாக மாறியிருக்கிறது. பல கட்சிகள் அதிமுக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழலில் இருக்கின்றன. அதில் ஒன்று காங்கிரஸ். திமுகவுடன்...

‘கேம் சேஞ்சர்’ ரங்கசாமிக்கு பாஜக கெடு… உடையும் ‘ஆட்சி கவிழ்ப்பு’ கூட்டணி?

தமிழகத்தைக் காட்டிலும் புதுச்சேரியில் நிகழும் அரசியல் ஆட்டங்கள் பிரமிக்க வைக்கின்றன. தமிழகத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அரசியல் நகர்வுகள் நடக்கின்றன. குறிப்பாக கேம் மேக்கராக என்ஆர் காங்கிரஸுன் ரங்கசாமி பார்க்கப்படுகிறார்....
TopTamilNews