முதன்முதலாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நாள் இன்று – சுவாரஸ்யமான விஷயங்கள்

ஏப்ரல் 18 என்பது வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் ஆகும். உலகில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நாள் ஆகும்.

மும்பை: ஏப்ரல் 18 என்பது வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் ஆகும். உலகில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நாள் ஆகும்.

கடந்த 2007-ஆம் ஆண்டு ஐ.சி.எல் கிரிக்கெட் லீக் போட்டிகளை அங்கீகரிக்க பி.சி.சி.ஐ மறுத்து விட்டது. மேலும் கிரண் மோர் மற்றும் கபில் தேவ் ஐ.சி.எல் குழுவில் இணைந்ததற்காக விமர்சிக்கப்பட்டனர். பி.சி.சி.ஐ.க்கு சொந்தமான கிரிக்கெட் வசதியான தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் இருந்ததால், ஐ.சி.எல் உடனான கபில் தேவின் தொடர்பு மோதலாக கருதப்பட்டது. ஆகஸ்ட் 21, 2007 அன்று கபில் தேவ் தனது என்.சி.ஏ பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

IPL 2008

பி.சி.சி.ஐ.யின் நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல் ஐ.சி.எல் முன்னேறும் என்று சுபாஷ் சந்திரா முன்னதாக கூறியிருந்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதன் தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் மூலம் ஒரு அறிக்கையை அளித்தது. அதன்படி ஐ.சி.எல் போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்காது என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூலை 25, 2012 அன்று கபில் தேவ் ஐ.சி.எல் பதவியை ராஜினாமா செய்ததாக பி.சி.சி.ஐ.க்கு தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் தனது சொந்த சர்வதேச டி-20 லீக் தொடரை தொடங்கியது. ஐபிஎல் தொடர் என அந்த லீக் போட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவின் தேசிய கால்பந்து லீக் மற்றும் மேஜர் லீக் பேஸ்பால் ஆகியவற்றின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஐபிஎல் போட்டி தொடர் வடிவமைக்கப்பட்டது. ஏப்ரல் 18, 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. அந்த அணியின் பிரெண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 158 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 82 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 அன்று ஐபிஎல் தொடங்கிய நாளாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

Most Popular

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!