முடங்கியது மும்பை: உயரும் பலி எண்ணிக்கை!

மும்பையில் கடந்த ஆறு  நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

மும்பை: மும்பையில் பெய்து வரும்  கனமழை காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக  வெளியாகியுள்ளது. 

mumbai

மும்பையில் கடந்த ஆறு  நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் காணும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மட்டுமில்லாமல் விமான ஓடுதள பாதையையும் நீர் சூழ்ந்துள்ளது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு  ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் 203 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

mumbai

இந்நிலையில்  கனமழை காரணமாக பிம்பிரிபாதா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 15 வயது சிறுமி உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் குழுவினர்  மீட்புப்பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர்.

mumbai

முன்னதாக கிழக்கு மலாட் பகுதியில் குடிசைப்பகுதி ஒன்றில் நேற்று  அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். இதே போல் கல்யாண் பகுதியிலுள்ள பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேரும், புனேவில்  கல்லூரி ஒன்றில் சுவர் இடிந்ததில் 6 பேரும் பலியாகியுள்ளனர். 

mumbai

உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மும்பை மக்கள் பீதியில் உள்ளனர். 

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...