Home சினிமா முகமூடிகள் அணியாத மாமனிதர்: அஜித்தை புகழ்ந்து தள்ளிய தந்தை நடிகர்!

முகமூடிகள் அணியாத மாமனிதர்: அஜித்தை புகழ்ந்து தள்ளிய தந்தை நடிகர்!

யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல், எந்த விதமான முகமூடிகளையும் அணியாத மனிதநேயர் அஜித் என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல், எந்த விதமான முகமூடிகளையும் அணியாத மனிதநேயர் அஜித்’ என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

‘தல’ என தன் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் நடிப்பில், ‘விஸ்வாசம்’ படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள், தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இதனால் அஜித் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.

rajkiran

இதன் தொடர்ச்சியாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,  ‘அரசியலில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபடும் எண்ணமில்லை. எனது திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக உள்ளேன். தனிப்பட்ட அரசியலில் எனக்கு இருக்கும் விருப்பு வெறுப்பை நான் யார் மீதும் திணிப்பதில்லை’ என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் அஜித்தின் அறிக்கை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ‘யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல், எந்த விதமான முகமூடிகளையும் அணியாத மனிதநேயர் அஜித்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர் முன்னதாக அஜித் நடித்த ‘கிரீடம்’ படத்தில் அவருக்குத் தந்தை கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் சமுதாய கட்டிடத்திற்கு பூமிபூஜை செய்து கட்டிடப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது. யார்...

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்வது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்- புகழேந்தி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

தமிழகத்தில் மேலும் 621 பேருக்கு கொரோனா, 5பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9கோடியே 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!