முகப்பருவை ஈஸியா நீக்கிடலாம்… இதை ஃபாலோ பண்ணுங்க

சிலருக்கு உடலில் அதிகப்படியான எண்ணெய் பசை தன்மையைக் கொண்ட சருமம் இருக்கும். இவர்களுக்கு முகப்பருக்கள் தோன்றி, முகத்தின் பொலிவையே சிதைத்துவிடும். முகப்பருக்கள் பல்வேறு காரணங்களால் வருகின்றது. குறிப்பாக ஹார்மோன்களின் சித்து விளையாட்டும் முகப்பருக்களின் காரணத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.  மூக்கு, நெற்றி, கன்னங்கள் என்று முகப்பருக்கள் தோன்றுவதற்கான இடங்களுக்கு வரைமுறை எல்லாம் கிடையாது. பெரும்பாலும் கன்னங்களில் அதிகளவில் தோன்றி, தோற்றத்தை பொலிவிழக்கச் செய்கிறது.

pimples

மலச்சிக்கல், அதிகளவில் எண்ணெய் பசைத்தன்மை, பொடுகு பிரச்சனை, சரியான அளவு தண்ணீர் உட்கொள்ளாதது போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் இந்த முகப்பருக்களினால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். 

முகப்பருத் தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதற்கு முன் உங்கள் உடலை நீங்கள் ஆராதியுங்கள். நன்கு கவனித்து, உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுங்கள். முகத்தில் அதிகளவில் எண்ணெய் பசை சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளியில் எங்கு சென்று வந்தாலும், முகத்தை நல்ல குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், எண்ணெய் பசைத் தன்மை குறையும். இந்த எண்ணெய் பசையுடன், அழுக்கும் சேரும் போது முகப்பருவாக மாறுகிறது. 

மலச்சிக்கலால், உடலில் வேண்டாத கழிவுகள் சேரும் போதும் முகப்பருக்களாக உருவெடுக்கும்.  தலையில் பொடுகு அதிகமாக இருப்பவர்கள்,  தலைக்கு குளிக்கும் போது தலையிலிருந்து கீழ் வடிகிற அழுக்குத் தண்ணீர் முகத்தில் பட்டு அதனாலும் முகத்தில் பருக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கான தீர்வாக சில எளிய வீட்டு வைத்தியத்தை முறையாகக் கடைபிடித்து வந்தாலே போதும். 

pimples

துளசி இலையையும், வேப்பிலையையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ள வேண்டும். அந்தச் சாற்றினை முகத்தில் பூசிவிட வேண்டும். உலர்ந்தவுடன் மீண்டும், மீண்டும் ஒரு நாளைக்கு மூன்று முறைகள் பூசி வாருங்கள். இவை கிருமி நாசினியாகச் செயல்பட்டு, முகத்தில் வடுக்கள் இல்லாமல் முகப்பருக்களை அழிக்கிறது.

பின்பு 2தேக்கரண்டி பச்சரிசி மாவுடன் வேப்பிலை, துளசி சாற்றினை கலந்து  பூசவேண்டும். உலர்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவி விடவேண்டும். வாரம் இருமுறை செய்தாலே பருக்கள் மறைந்து முகம் பொலிவு பெறலாம். சந்தனத்தையும், ஜாதிக்காயையும் கல்லில் இழைத்து வரும் சாந்தினை முகப்பரு உள்ள இடத்தில் பூசி காய்ந்தவுடன் கழுவிவிடவேண்டும். ஜாதிக்காய் முகப்பருவால் ஏற்பட்ட கருமையை போக்கிவிடும். சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். இதை தினசரி செய்து வந்தால் முகப்பருக்களின் தொல்லை எப்பொழுதுமே எட்டிப் பார்க்காது.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....