Home சினிமா மீரா மிதுனுக்கு முத்தம் கொடுத்த மோகன் வைத்யா! பங்கமாகக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மீரா மிதுனுக்கு முத்தம் கொடுத்த மோகன் வைத்யா! பங்கமாகக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மிராமினுதுக்கு, மோகன்வைத்யா முத்தம் கொடுத்ததை நெட்டிசன்களை பங்கமாகக் கலாய்த்து வருகின்றனர். 

சென்னை: மிராமினுதுக்கு, மோகன்வைத்யா முத்தம் கொடுத்ததை நெட்டிசன்களை பங்கமாகக் கலாய்த்து வருகின்றனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் தர்ஷன் மற்றும் சாக்சி விளையாடிய டாஸ்க்கிற்கு யாரும் உதவி செய்யக்கூடாது என்று விதி இருந்தும், விதியை மீறி மீராமிதுன் மறைமுகமாக அவர்களுக்கு உதவி செய்தார். இதை தட்டி கேட்ட கவினுக்கும், மீராவுக்கும் இடையே பிரச்சனை வந்தது. 

மீராவை கவின் ‘உனக்கு அறிவிருக்கா’ என்று கேட்க இந்த பிரச்சனை பூகம்பமாக வெடித்தது. அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு மீராவுக்கு அட்வைஸ் செய்தனர். அப்போது மோகன் வைத்யா சொல்ல வருவதைக் கொஞ்சம் கூட காதில் வாங்கி கொள்ளாத மீரா அவரை எதிர்த்துப் பேசினார். இதனால் கடுப்பான வைத்யா வயசுக்கு மரியாதை கொடு என்று அனைவர் மத்தியில் திட்டி தீர்த்து விட்டார். உடனே வழக்கம் போல் மீரா தன்னுடைய அழுகை நாடகத்தைத் தொடங்கினார். பின்பு அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் தர்ஷன் மீராவை கட்டிப்பிடித்துச் சமாதானப்படுத்தினார்.

meera

இந்த நிலையில் மோகன் வைத்யா, மீராவை ‘நீ எனக்கு மகள் போன்றவர், உன்னை நான் திட்டவே இல்லை, மகளாக நினைத்து அறிவுரை மட்டுமே கூறினேன்’ என்று சொல்லி திடீரென மீராவை கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுத்தார். இதை பக்கத்தில் இருந்து பார்த்த சாண்டி ‘என்ன நடக்கிறதது ‘இங்க என்ன நடக்கிறது என்பது போல்’ அதிர்ச்சி அடைந்தார். 

இந்த விவகாரத்தை வைத்து நெட்டிசன்கள் ‘மோகன் வைத்யா இதெல்லாம் ஓவர்’. முன்னதாக மீரா தனக்குக் கொக்கி மாட்டி விடும் படி கேட்டதற்கு, தனக்கு விருப்பம் இல்லை என்று வனிதாவிடம் அவர் குறையாகக் கூறினார். ஆனால் இப்போ மட்டும் முத்தம் கொடுக்க சங்கடமாக இல்லையா என்று நெட்டிசன்கள் இஷ்டத்திற்குக் கிண்டல் செய்து வருகின்றனர். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்’ : நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மாணவரணி, இளைஞரணி,...

‘மாலத்தீவில் கட்டுமான பணி’ : ரூ.40 லட்சம் மோசடி செய்த தந்தை – மகன் கைது!

மாலத்தீவில் கட்டுமானப்பணி என்று கூறி தந்தை -மகன் இருவரும் ரூ.40 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஜீவா...

’டிப்ளமேஸின்னா அர்த்தம் தெரியுமா?’ வேல்முருகன் மீது மொழி வன்முறை! பிக்பாஸ் 19-ம் நாள்

பலர் ஆடும் விளையாட்டின் விதிகளுக்குள் ‘நீ மட்டும் ஒசத்தியோ!’ எனும் கொஞ்சம் பொறாமையைக் கலந்துவிட்டால், ஆட்டம் சூடு பிடிக்கும் என்பதை அறியாதவரா பிக்பாஸ். ரொம்ப அழகாக பத்த வெச்சிருக்கார். அதற்கான...

பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

மதுரை செங்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் -...
Do NOT follow this link or you will be banned from the site!