Home குற்றம் உள்ளூர் மீன்குழம்பால் ஒரு குடும்பமே சீரழிந்து போன விபரீதம்

மீன்குழம்பால் ஒரு குடும்பமே சீரழிந்து போன விபரீதம்

மாமியாருடன் மீன் குழம்பு சம்மந்தாக நடந்த பிரச்சனையில், மருமகள் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மீன்குழம்பால் ஒரு குடும்பமே சீரழிந்து போன விபரீதம்

திண்டிவனம்: மாமியாருடன் மீன் குழம்பு சம்மந்தாக நடந்த பிரச்சனையில், மருமகள் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு 2 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் இருந்தனர். பிரபுவுடன் அவரது தாய் மீனா வசித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பிரபு இறந்து விட்டார். இந்நிலையில் அம்மு தனது மாமியார் மீனா மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை மாமியார் மீனா, மருமகள் அம்முவிடம் தனக்கு மீன் குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
 
இதனால் மனமுடைந்த அம்மு, தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாமும் விஷம் அருந்தினார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் அம்முவின் குழந்தைகள் இறந்துவிட, அம்மு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மீன் குழம்புக்காக ஒரு குடும்பமே சீரழிந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீன்குழம்பால் ஒரு குடும்பமே சீரழிந்து போன விபரீதம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

எங்கள கேக்காம திருவிழா நடத்துறீங்களோ… பட்டியலின மக்களை காலில் விழவைத்த ஊர்மக்கள்!

சாதி மதம் இனம் கடந்து மக்கள் சகஜமாக ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி வரும் இக்காலகட்டத்தில் கூட, தமிழகத்தின் பல இடங்களில் இன்னமும் பட்டியலின மக்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி...

மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி!

தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க வேண்டுமென பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை எதிர்பாராத...

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் தமிழ்நாடு அரசு!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை அறிவியலாளர்களும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை...

கொரோனாவால் இறந்த மூதாட்டி : தகனம் செய்வதற்கு முன் எழுந்ததால் அதிர்ச்சி!

கொரோனா தொற்றால் இறந்ததாக மூதாட்டி ஒருவரை தகனம் செய்ய சென்ற போது எழுந்து உட்கார்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisment -
TopTamilNews