Home சினிமா மீண்டும் ஹாலிவுட் செல்லும் பிரியங்கா: மிண்டி காலிங்குடன் புதிய படம்!

மீண்டும் ஹாலிவுட் செல்லும் பிரியங்கா: மிண்டி காலிங்குடன் புதிய படம்!

நடிகை பிரியங்கா சோப்ரா நடிகை மிண்டி காலிங்குடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

வாஷிங்டன்: நடிகை பிரியங்கா சோப்ரா நடிகை மிண்டி காலிங்குடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

priyanga

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை கடந்த டிசம்பர் மாதம் கரம் பிடித்தார். திருமணம் முடிந்த கையோடு திரைப்படங்களில் நடிப்பதில் முனைப்புக் காட்டி வருகிறார் பிரியங்கா.

 

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா,  பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் நடிக்க இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல கதைகளை சொல்ல வேண்டும் என்பதில் விருப்பம் கொண்ட இரண்டு பெண்கள் இதில் இணைந்திருப்பது பெருமைப்படுகிறேன். விரைவில் சினிமாவில் சந்திக்கலாம்’ என்றும் பதிவிட்டுள்ளார். 

priyanga

இப்படத்தை மிண்டி காலிங் இயக்க இருப்பதாகவும், இது, இந்திய திருமணம் பற்றிய காமெடி படம் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் இந்தியா மற்றும் அமெரிக்காவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

priyanga

பிரியங்கா சோப்ரா தற்போது தி ஸ்கை  இஸ் பிங்க் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சோனாலி போஸ் இயக்கும் இந்தப் படம் பேச்சாளர் ஆயிஷா சௌத்ரியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிறது. ஃபர்ஹன் அக்தர், சைரா வாசிம், ரோஹித் சராஃப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க: கணவர் மீது துர்நாற்றம் வருகிறது: விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவி!

மாவட்ட செய்திகள்

Most Popular

“திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓராண்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள்” – ஆட்சியர் சிவன்அருள்

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் சிவன்அருள் தெரிவித்தார்.

தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் வசித்து வரும் இப்ராஹீம் என்பவரின் மகன் ரகுமான்(36). இவர் நேற்று இரவு காரில் விருது நகரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அருப்புக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை...

வைகை ஆற்றில் மிதந்த விஷ நுரை; பாலத்தை தாண்டி வெளியே வந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளநீருடன் வெண்மை நிறத்தில் விஷ நுரையும் கலந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்...

விஞ்ஞானியைக் கொன்ற தீவிரவாதிகள் – ஈரானில் நடந்த கொடூரம்

ஈரான் நாட்டைச் சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி மெஹ்சென் ஃப்க்ஹிஸாத் (Mohsen Fakhrizadeh) மிகவும் புகழ்பெற்றவர். ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுபவர். இவர் ஈரானிய...
Do NOT follow this link or you will be banned from the site!