Home சினிமா மீண்டும் போலீஸ் அதிகாரியாக ஜோதிகா: அடித்தது மிக பெரிய ஜாக்பாட்!

மீண்டும் போலீஸ் அதிகாரியாக ஜோதிகா: அடித்தது மிக பெரிய ஜாக்பாட்!

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாக்பாட்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாக்பாட்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவை விட்டு சிறிது காலம் விலகியிருந்தவர் நடிகை ஜோதிகா. பின்பு ’36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன ஜோதிகா அப்படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார். 

jothika

அந்த வகையில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சூர்யா தயாரிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமளிக்கும் கதைக்களத்தைக் கொண்ட காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரேவதி, ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். ஏற்கனவே ஜோதிகா நாச்சியார் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘ஜாக்பாட்’ படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிவடைந்தது. இந்நிலையில், ஜாக்பாட் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், ஜோதிகா செம்ம தில்லாக கண்ணாடி அணிந்து கார் மீது ஏறி நிற்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. மற்றொன்றில் ஜோதி காவும், ரேவதியும் போலீஸ் உடையில் இருக்கின்றனர். மேலும் விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. 

Most Popular

அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கும் விவசாயம் பற்றி தெரியாதா? முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி!

மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்து சொல்ல விவசாயியாக இருக்க அவசியம் இல்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

ஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் யுத்தம் போல மாறிவிட்டது. பஞ்சாப் – டெல்லி போட்டியில் சூப்பர் ஓவர் சென்றது. பெங்களூரு – ஹைதரபாத் போட்டியில் கடைசி ஓவர்...

ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க 6 விதமான கருவிகள்: மெக்கானிக் நாகேந்திரன் சாதனை

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி மீட்பு நடவடிக்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் நாகையை சேர்ந்த மெக்கானிக் நாகேந்திரன்.

பெற்ற தாயுடன் சேர்ந்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கடந்த ஜூலை மாதம் போக்ஸோ சட்டத்தின் கீழ் நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார். 15 வயது சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல்...
Do NOT follow this link or you will be banned from the site!