Home சினிமா மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகை அமலா: யார் படத்தில் தெரியுமா?

மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகை அமலா: யார் படத்தில் தெரியுமா?

ரஜினியுடன் வேலைக்காரன், மாப்பிளை, கமலுடன் சத்யா என முன்னணி  நடிகர்களுடன் வலம்வந்த அமலா பாலிவுட் படங்கள் வரை நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

நடிகை  அமலா தமிழில் 1986 ஆம் ஆண்டு இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி படம் மூலம் அறிமுகமானார். 

amala

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றநிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினியுடன் வேலைக்காரன், மாப்பிளை, கமலுடன் சத்யா என முன்னணி  நடிகர்களுடன் வலம்வந்த அமலா பாலிவுட் படங்கள் வரை நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

amla

தமிழில் 1991 ஆம் ஆண்டு கடைசியாக கற்பூர முல்லை  படத்தில் நடித்த இவர் நடிகர் நாகர்ஜூனாவை காதலித்து  திருமணம் செய்து கொண்ட  பின்  திரையுலகிலிருந்து விலகினார். தற்போது இவரின் மகன் அகில் தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் ரீ எண்ட்ரி ஆனார். இருப்பினும் இவர் தமிழ் படங்களில் கமிட்டாகவில்லை. 

amala

இந்நிலையில் நடிகை அமலா மீண்டும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம். இதுகுறித்து கூறியுள்ள அவர், இயக்குநர்  கார்த்திக் என்னிடம் ஒரு கதை சொன்னார். அதில் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்கு அமலா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார். இதனால் நாங்கள் அவரை சந்தித்து கதையை சொன்னோம். கதையை கேட்டு உற்சாகமான அவர், கண்டிப்பாக நடிப்பதாக தெரிவித்தார் . இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்புகிறோம்’ என்றார்.  

 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

நவம்பர் 6 ஆம் தேதி முதல் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டம்!

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, “அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள். அரசு...

சூர்யாவின் 40 ஆவது பட அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியானது!

சூர்யாவின் 40வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படம் விரைவில்...

செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

மதுரையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில், ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி,...

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கின் போது குறைவாக இருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது....
Do NOT follow this link or you will be banned from the site!