Home சினிமா மீண்டும் உருவாகவிருக்கும் சிவா - அஜித் கூட்டணி?!

மீண்டும் உருவாகவிருக்கும் சிவா – அஜித் கூட்டணி?!

தல அஜித் – சிவா 5வது முறையாக மீண்டும் கூட்டணி அமைத்து ஒரு புதிய படத்தில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: தல அஜித் – சிவா 5வது முறையாக மீண்டும் கூட்டணி அமைத்து ஒரு புதிய படத்தில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தல அஜித் நான்காவது முறையாக இயக்குநர் சிவாவுடன் கூட்டணி அமைத்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் விஸ்வாசம். குடும்ப திரைப்படமாக உள்ளதால் மக்கள் மத்தியில் வசூல் மட்டும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. விஸ்வாசம் வெளியாகி இன்றுடன் 50நாள் கடந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

siva and ajith

அதையடுத்து தல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘பிங்க்’ ரீமேக்கில் பிஸியாக நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படம் வரும் தல பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தல அஜித்தின் அடுத்த படத்தை யாரு இயக்குவது என்று தமிழ் சினிமாவில் மிகுந்த போட்டியே நிலவிவருகிறது. அந்த வகையில் இயக்குநர் வெங்கட்பிரபு, ஹெச்.வினோத், விஷ்ணுவர்தன் என பலருடைய பெயர் அடிபடுகிறது. ஆனால், மீண்டும் சிவாவுடன் தான் கூட்டணி என்பது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

siva and ajith

அதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் 50 நாள் வெற்றி விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசியதாவது, “நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை விட, மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளனர். அஜித் சாரை வைத்து மீண்டும் இதே காம்போவில் படம் பண்ண முயற்சி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே இவர்களின் காம்போவில் உருவான திரைப்படங்களை நினைத்து வருத்தம் அடைந்த தல ரசிகர்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சியான தகவலாகவே கருதப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார். அதன்படி வீடுகளுக்கு 10 ரூபாய்...

விளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே கோவில் குமரெட்டியாபுரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். விளாத்திக்குளம் அடுத்த கோவில்...

“உறங்கியவன் தொடையில் திரித்த வரை லாபம்; சந்தடி சாக்கில் உலை வைக்கும் மோடி-எடப்பாடி”

கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள 14க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து...

“இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?” – மக்கள் நீதி மய்யத்தின் ரூ.1 லட்சம் பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் குறித்தான அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்திற்குப்...
TopTamilNews