Home உலகம் மியான்மர் ராணுவத்தின் பயங்கரமான மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்த முடியாது: ஐ.நா. பொதுச்செயலாளர்

மியான்மர் ராணுவத்தின் பயங்கரமான மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்த முடியாது: ஐ.நா. பொதுச்செயலாளர்

சென்னை: மியான்மர் ராணுவத்தின் பயங்கரமான மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்த முடியாது என்று ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.

மியான்மர் ராணுவத்தின் பயங்கரமான மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்த முடியாது: ஐ.நா. பொதுச்செயலாளர்

கடந்த ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக வங்கதேசத்தில் 720,000 மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த பெரும் நெருக்கடி உருவாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தாரஸ், ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்த சூழலை கடந்த ஆண்டின் மிக மோசமான மனித உரிமை நெருக்கடி என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் வங்கதேச ரோஹிங்கியா அகதி முகாம்களை பார்வையிட்ட போது பயங்கரமான துன்புறுத்தல் கதைகளை கேட்டதாக நினைவுக்கூர்ந்துள்ள குத்தாரஸ், “ எப்படி தன் மகன் தன் முன்பே கொல்லப்பட்டார் என்பதை சொல்லும் போது ஒரு தந்தை நிலைக்குலைந்து போனார். அவர் அம்மா கொடூரமாக கொல்லப்பட்டு, அவரின் வீடு தீக்கரையாக்கப்பட்டது என்றார். பாலியல் வன்புணர்வு காரணமாக உண்டான ஒரு சிறிய குழந்தையை கலக்கத்தோடு ஏந்தியிருந்த ஒரு பெண், “எங்களுக்கு மியான்மரில் பாதுகாப்பு வேண்டும், குடியுரிமை வேண்டும். எங்கள் சகோதரிகள், பெண் குழந்தைகள், தாய்மார்கள் பட்ட துன்பங்களுக்கு நீதி வேண்டும் எனக் கோரினார்”.

கடந்த ஆகஸ்ட் 2017யில் அராக்கன் ரோஹிங்கியா சல்வேஷன் ஆர்மி என்ற ஆயுதக்குழு மியான்மர் பாதுகாப்பு அரண்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ரோஹிங்கியா பகுதிகளை கடுமையாக தாக்கத் தொடங்கியது மியான்மர் ராணுவம். ராணுவத்துடன் புத்த பேரினவாதிகளும் மியான்மரின் பாதுகாவலர்கள் என்ற பெயரில் இணைந்து கொண்டு ரோஹிங்கியா மக்களை கொல்லவும் துன்புறுத்தவும் துரத்தவும் செய்தனர். இதனால் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஐ.நா. அறிக்கையில் மியான்மர் அதிகாரிகளுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ சிறப்பு தீர்ப்பாயத்துக்கோ பரிந்துரைக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதன் மூலம், இந்த பெரும் நெருக்கடியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த அறிக்கைக்கு எதிராக இன்று பேசியுள்ள மியான்மர் அரசின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஜா ஹ்டே, “ஐ.நா.வின் உண்மை கண்டறியும் குழுவை மியான்மருக்குள் நுழைய விடமாட்டோம். மனித உரிமை அவையின் எந்த தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறியிருக்கிறார்.

மியான்மர் ராணுவத்தின் மீதான ஆயுததாரிகளின் தாக்குதலை  ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டித்துள்ள போதிலும், மியான்மர் ராணுவத்தின் பயங்கரமான மனித உரிமை மீறல்களை எதைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் குத்தாரஸ் பேச்சின் அம்சத்தை பாதுகாப்பு அவையில் உள்ள முக்கிய நாடுகள் கையில் எடுக்கும் போது மியான்மருக்கு அழுத்தங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியான்மர் ராணுவத்தின் பயங்கரமான மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்த முடியாது: ஐ.நா. பொதுச்செயலாளர்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

உணவின்றி தவிப்பவர்களின் பசியாற்றும் சகோதரர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடுகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10ம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பலர்,...

எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

எழுத்தாளர் கி.ரா. உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். கி.ரா. உடலுக்கு சொந்த ஊரான தூத்துக்குடி கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவலில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் பிற்பகல்...

அவரை நான் பல முறை சந்தித்த போதெல்லாம்… கனிமொழி உருக்கம்

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன்(99) நேற்று காலமானார். புதுச்சேரியில் வசித்து வந்த அவர், மூப்பின் காரணமாக உயிரிழந்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள...

குணமடைந்த ரங்கசாமி… தேங்காய், பூசணிக்காய் உடைத்து தொண்டர்கள் வரவேற்பு!

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய புதுவை முதல்வர் ரங்கசாமியை தொண்டர்கள் தேங்காய், பூசணிக்காய் உடைத்து வரவேற்றனர். புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன்...
- Advertisment -
TopTamilNews