Home சினிமா மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !

மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோ மூலம் சினிமா துறையில் கால் பதித்தார்.

மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோ மூலம் சினிமா துறையில் கால் பதித்தார். ஆரம்ப காலகட்டத்தில் ‘அட்டக்கத்தி’ உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ttn

அதன் பிறகு இவர் நடித்த ‘காக்க முட்டை, பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட்ட படங்கள் இவருக்குப் பட வாய்ப்பை அதிகரித்துக் கொடுத்தது. நான் ஹீரோயின் ரோல் மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் அம்மா, அக்கா, தங்கை, மகள் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பைப் பிச்சி உதறி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

ttn

சமீபத்தில் நடிகர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல ‘கனா’ படத்திலும் தனது நடிப்பை மக்கள் வியக்கும் படி கொடுத்திருந்தார். அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு சினிமாவிலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக “வொர்ல்ட் பேமஸ் லவ்வர்” படத்தில் நடித்து வருகிறார். 

tttn

சின்னதிரையில் இருந்து தனது நடிப்புத் திறமையால் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாகியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று 30 ஆவது பிறந்தநாள். இவருக்கு சினிமா பிரபலங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் ட்விட்டர் மற்றும் பேஸ் புக்கில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

ttn

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பிறந்தநாளை ‘ஹோப்’ தொண்டு நிறுவனத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுடன் கொண்டாடியுள்ளார். அங்கு கேக் வெட்டி, அதனை அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஊட்டி விட்டு தனது பிறந்தநாளை ஆனந்தமாகக் கழித்துள்ளார்.  

ttn

இது குறித்து பேசிய ஐஸ்வர்யா, இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“ஜூலை 31 தான் கடைசி… அதற்குள் +2 தேர்வு ரிசல்ட் வரனும்” – அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது....

மேலும் சில தளர்வுகள்… முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில வாரங்களுக்கு முன் முழு ஊரடங்கு அமலில்...

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...
- Advertisment -
TopTamilNews