மார்பு  சளியைப் போக்கும் நண்டு தொக்கு..

தமிழ் நாட்டின் இப்போதைய கால நிலைக்கு ஏற்ற உணவு நண்டுதான். கொஞ்சம் மிளகு தூக்கலாகப் போட்டு செய்யப்படும் நண்டுத் தொக்கு நெஞ்சுச் சளி,இருமல் எல்லாவற்றுக்கும் ஏற்ற மருந்து.செயவதும் சுலபம்.வாருங்கள்!

தமிழ் நாட்டின் இப்போதைய கால நிலைக்கு ஏற்ற உணவு நண்டுதான். கொஞ்சம் மிளகு தூக்கலாகப் போட்டு செய்யப்படும் நண்டுத் தொக்கு நெஞ்சுச் சளி,இருமல் எல்லாவற்றுக்கும் ஏற்ற மருந்து.செயவதும் சுலபம்.வாருங்கள்!

என்னென்ன தேவை:

crab throat

சுத்தம் செய்யப்பட்ட கடல் நண்டு ½ கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
இஞ்சிப்பூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு
கடலை எண்ணெய் 1 குழிக்கரண்டி
மஞ்சள்தூள் ½ ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
மிளகுத்தூள் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை

எப்படிச் செய்வது:

carb masala

வட சட்டியை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெயை ஊற்றி முதலில் இஞ்சிப்பூண்டு விழுதை போட்டு அத்துடன் பச்சை மிளகாய்களை ஒடித்துப் போடவும்,பச்சை வாசனை போனதும் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் உப்புச் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறம் அடைந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும்.இரண்டும் நன்றாக குழைவாக வெந்ததும் பொடிகளைப் போட்டு கிளறுங்கள்.இப்போது உங்கள் ருசிக்கேற்றபடி உப்புச் சேர்த்து மறுபடியும் கிளறிவிட்டு சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டுத் துண்டுகளை அள்ளிப்போட்டு கிளறி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவைத்து வேக விடுங்கள்.நண்டில் இருந்து வெளிப்படும் நீங்கள் ஊற்றிய நீரும் வற்றியதும் ஒரு முறை கிளறிவிட்டு அரைமணி நேரம் மூடி வைத்திருந்து  பிறகு சாப்பிடுங்கள்.

Most Popular

‘எந்த கட்சி அரியணை ஏறும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்’ முதல்வர் பழனிசாமி காட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மும்மொழி கொள்கையை புதிய கல்விக் கொள்கை அறிவுறுத்துவதால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சமூக...

“தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்” : கமல் ஹாசன் புகழஞ்சலி!

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி எப்போதும் ஒரு அரசியல்வாதியாக, மக்கள் பிரதிநிதியாக, ஒரு கட்சியின் தலைவராக தன்னுடைய நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் இருந்தவர். தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர்....

சண்டையால் பிரிந்து சென்றார்… குழந்தையை கொடுக்க மறுப்பு… காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்

கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள அக்கரைதத்தப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்....

நெல்லையில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைபெறுகிறது :முதல்வர் பழனிசாமி பேச்சு

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு நேற்று சென்ற முதல்வர் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதே போல அம்மாவட்டங்களின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு...