Home தமிழகம் மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை.. !

மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை.. !

தமிழக துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடந்த 14 ஆம் தேதி 2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை 10 ஆவது முறையாகத் தாக்கல் செய்தார்.

தமிழக துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடந்த 14 ஆம் தேதி 2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை 10 ஆவது முறையாகத் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் அறிவிப்புகளைத் தெரிவித்தார். அதன் பின்னர் சபா நாயகர் தலைமையிலான குழு, பட்ஜெட் குறித்து விவாதிக்க எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்தலாம் என்பது குறித்து விவாதித்தனர். அந்த கூட்டத்தின் முடிவில் பிப்ரவரி 17 முதல் 20 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி, அந்த 4 நாட்கள் கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. 

ttn

நான்காம் நாள் கூட்டத்தொடரின் முடிவில், காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து, சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதியை அறிவிக்காமல் சபாநாயகர் தனபால் ஒத்தி வைத்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடும் என்றும் அதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளின்  மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘7.5% இட ஒதுக்கீடு’ நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: எல்.முருகன் விளக்கம்!

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

விஷ கிழங்கை சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில் வயிற்று வலி காரணமாக விஷ கிழங்கை சாப்பிட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பென்னாகரம் வட்டம்...

“அரசு அதிகாரிகள் வீட்டில் ரகசிய குறியீடு” கொள்ளையர்களின் சதித் திட்டமா?

மதுரையில் அரசு அதிகாரிகளின் வீட்டில் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டு இருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, டிஆர்ஓ காலணியில் இருக்கும் ஒரு சில வீடுகளில் பச்சை,...

மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த பெண் கைது

தர்மபுரி தர்மபுரி அருகே முறைகேடாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி வெண்ணாம்பட்டி அடுத்த குள்ளனூர் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை...
Do NOT follow this link or you will be banned from the site!