Home ஆன்மிகம் மார்கழி மாத விருச்சிக ராசி பலன்கள்

மார்கழி மாத விருச்சிக ராசி பலன்கள்

விருச்சிக ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

விருச்சிக ராசிக்கு 2ல் சூரியனும், சனியும் 4, 5ல் செவ்வாயும் 12, 1ல் சுக்கிரனும் 1,2ல் புதனும் 1ல் குருவும் 9ல் ராகுவும் 3-ல் கேதுவும் சஞ்சாரம் செயகின்றனர் . மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

viruchchika rasi palngal

விருச்சிக ராசிக்கு குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியைப் பாதிக்கக்கூடும். எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். 

விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதை கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். 

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.

viruchchika rashi palangal

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்குப் பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். 

புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். மாணவர்களுக்குப் படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. 

viruchika rasi palangal

விருச்சிக லக்ன பலன்கள்:  அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும்.

விசாகம்  நட்சத்திரம் :  புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும்.

அனுஷம் நட்சத்திரம் :  சக ஊழியர்களால் ஓரளவு உதவி கிடைக்கும்.

கேட்டை நட்சத்திரம் : உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

சந்திராஷ்டம நாட்கள் :  டிசம்பர் 23,24

அதிர்ஷ்ட எண்கள் :  2,4,6

அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் வியாழன்,வெள்ளி 

viruchchika rashi palangal

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிகப்பு 

வழிபடவேண்டிய தெய்வம் :  அம்பிகை, மகா விஷ்ணு

பரிகாரம் : புதன்கிழமைகளில் விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும். சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு செய்வதும் மிக சிறந்த பரிகாரமாக அமையும்.

Most Popular

முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை.. பதவி விலகுங்க… யோகி ஆதித்யநாத்தை வலியுறுத்திய பிரியங்கா காந்தி

ஹத்ராஸ் சம்பவத்தை குறிப்பிட்டு, யோகி ஆதித்யநாத் முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும் கவிழும்…. ஹத்ராஸ் சம்பவம் குறித்து சூசகமாக சொன்ன பா.ஜ.க. மூத்த தலைவர்

ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வரும் வேளையில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை, யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சிவ சேனா தெரிவித்துள்ளது. அதேசமயம் சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு...

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...
Do NOT follow this link or you will be banned from the site!