Home ஆன்மிகம் மார்கழி மாத கடக ராசி பலன்கள்

மார்கழி மாத கடக ராசி பலன்கள்

கடக ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மார்கழி மாத கடக ராசி பலன்கள்

கடக ராசிக்கு 6ல் சூரியனும் சனியும்,8, 9ல் செவ்வாயும், 4, 5-ல் சுக்கிரனும்,5, 6-ல் புதனும்,5-ல் குருவும், 1ல் ராகு 7ல் கேதுவும் சஞ்சாரம் செய்கின்றனர். மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

kadakam

கடக ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. 

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. 

மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். 

kadakam

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். 

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

புதிய முயற்சிகள் வெற்றி தரும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். 

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். 

muruga

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்கள் பாராட்டப்படும். 

கடக லக்ன பலன்கள் : புதிய முயற்சிகள் வெற்றி தரும். 

புனர்பூசம் நட்சத்திரம் : ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

பூசம் நட்சத்திரம் :  விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரம் : ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம நாட்கள் :  ஜனவரி 10,11

அதிர்ஷ்ட எண்கள் : 1,7,9

kadakam

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன், வியாழன் 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் 

வழிபடவேண்டிய தெய்வம் : அம்பிகை மற்றும் விஷ்ணு 

பரிகாரம் : அருகில் இருக்க கூடிய முருகன் ஆலயங்களுக்கு சென்று வருவது யோகமான பலன்களை தரும்.

வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.

மார்கழி மாத கடக ராசி பலன்கள்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

நடிகர் விஜய் 65வது படத்தின் First Look வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது...

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள் என தெரியுமா? – அரசு வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று...

“பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு பணப்பலன்களுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு”

1961ஆம் ஆண்டு மகப்பேறு பயன் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் முழு ஊதியம் பணப்பலனாக வழங்க வகை செய்யப்பட்டது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு இந்தச்...

“கணவனை கொலை செய்வது எப்படி”-கூகுளில் தேடிய மனைவி -கணவனுக்கு நேர்ந்த கொடுமை

கூகுள் மூலம் கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர் . மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிபூர்...
- Advertisment -
TopTamilNews