Home அரசியல் மாநிலங்களைவைத் தேர்தலில் வைகோ போட்டி!

மாநிலங்களைவைத் தேர்தலில் வைகோ போட்டி!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான 6 பேரின் பதவிக்காலம் இம்மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது

மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவதாக மதிமுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

vaiko

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான 6 பேரின் பதவிக்காலம் இம்மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல்  வரும் 18 ஆம் தேதி நடைபெறும் என்று  ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் வழக்கறிஞர் பி.வில்சன், தொமுசவை சேர்ந்த சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.  அதேபோல் கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, மதிமுகவுக்கு ஒரு தொகுதியை வழங்க திமுக முடிவெடுத்த நிலையில், அதன்படி மதிமுகவுக்கு ஒரு இடம் வழங்கியுள்ளது. 

vaiko

இந்நிலையில் மதிமுகவின் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் கூட்டம் மதிமுக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘குறைந்து வரும் கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 563 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக...

‘7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது’ – முதல்வர் திட்டவட்டம்!

மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவாகரத்தில் அரசியல் எடுபடாது என முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையொட்டி,...

‘பாம்பன் பாலத்தில் இரும்பு மிதவையுடன் கூடிய கிரேன் மோதல்’: விரைவு ரயில் நிறுத்தம்!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இரும்பு மிதவையுடன் கூடிய கிரேன் மோதியதால், சென்னையில் இருந்து வந்த விரைவு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி மனைவியின் தோழி செய்த போன்! நெகிழ்ந்துபோன மு.களஞ்சியம்

கும்மிடிப்பூண்டி ஈழ முகாமில் வசிக்கும் பெண்ணின் படிப்பு செலவிற்கு இயக்குநர் மு.களஞ்சியம் உதவி வந்துள்ளார். படித்து முடித்ததும் நன்றி சொல்வதற்காக களஞ்சியத்தின் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவரது அலுவலகம் மாறியிருந்ததால்...
Do NOT follow this link or you will be banned from the site!