Home சினிமா மாநாட்டில் சிம்புவை எதிர்க்கும் ஆக்‌ஷன் கிங்!

மாநாட்டில் சிம்புவை எதிர்க்கும் ஆக்‌ஷன் கிங்!

நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் ரிலீஸுக்கு இப்படம் தயாராகி வருகிறது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் சார்ந்த காமெடி ஆக்‌ஷன் திரைப்படமாக ‘மாநாடு’ உருவாகவுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புவை நேரடியாக எதிர்க்கும் மாஸ் வில்லனாக அர்ஜுன் நடிக்கவுள்ளாராம்.

‘மங்காத்தா’ கூட்டணி போல் வெங்கட் பிரபு, சிம்பு, அர்ஜுன் அமைத்துள்ள ‘மாநாடு’ ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநாடு’ திரைப்படம் தாறுமாறான மாஸாக, கெத்தாக உருவாகவுள்ளது. இப்படம் சிம்பு ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என்பது உறுதி என்று ட்வீட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆர்டர் செய்ததோ மட்டன் பிரியாணி! வந்ததோ புழு பிரியாணி

சிந்தாமணியில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய மட்டன் பிரியாணியின் பூழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட...

தமிழிசைக்கு புதுச்சேரி முதல்வராக ஆசை: நாராயணசாமி

புதுச்சேரி ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் அம்மாநிலத்திற்கு முதல்வராக ஆசைப்படுவதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு...

சட்டமன்ற தேர்தல்: அதிரடியாக செயல்படும் 112 குழுக்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்ந்து சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த 112 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
TopTamilNews