Home சினிமா மாதவன் - அனுஷ்கா உடன் கைக்கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்

மாதவன் – அனுஷ்கா உடன் கைக்கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்

நடிகர் மாதவன், நடிகை அனுஷ்கா இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை: நடிகர் மாதவன், நடிகை அனுஷ்கா நடிக்கும் திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் திகில் திரைப்படம். பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டோலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். 

இதில், நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவுள்ளனர்.

மேலும், ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமேரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருடமே (2019) வெளியாகும் எனவும் தயாரிப்பளர்கள் T.G.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் அறிவித்துள்ளனர்.

கோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன்,  நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தென்காசி தென்காசி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த...

100 அடி உயரத்தில் போராட்டம் நடத்தும் குடும்பம்

100 அடி உயர நீர் தேக்க தொட்டியின் மேல் ஏறி நின்று ஒரு குடும்பமே போராடி வரும் விவகாரம் நெல்லை மாவத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விவசாய மசோதாக்கள்- கங்கையைப்போல தூய்மையான நோக்கம் கொண்டது – பிரதமர் வாக்குறுதி!

டெல்லியில் போராடும் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து வதந்திகள் பரப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். வேளாண்மை சட்டங்கள் குறித்து அடிப்படை...

போதையில் ஆள்மாற்றி கொலை செய்த ஆசாமிகள்

ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம்(39), சண்முகவேல்(40). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் வேலுச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Do NOT follow this link or you will be banned from the site!