Home க்ரைம் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை : காதலனுக்கு உதவிய டியூஷன் டீச்சர்..!

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை : காதலனுக்கு உதவிய டியூஷன் டீச்சர்..!

சென்னையைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி சென்ற நபரைக் காதலித்து வந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி சென்ற நபரைக் காதலித்து வந்துள்ளார். இவர் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார்.

Teacher

பாலாஜியும் சஞ்சனாவும் வழக்கமாகத் தினமும் பேசிக் கொள்வர் என்று கூறப்படுகிறது. ஆனால், திடீரென பாலாஜி சஞ்சனாவுடன் பேச மறுத்துள்ளார். பாலாஜியின் மேல் பைத்தியமாக இருந்த சஞ்சனா ஏன் என்னுடன் பேசாமல் இருக்க? நான் ஏதாவது செய்து விட்டேனா? நீ மீண்டும் என்னுடன் பேச நான் செய்ய வேண்டும் என்று பாலாஜியிடம் கேட்டுள்ளார். 

Teacher

அதற்கு பாலாஜி உன்னிடம் டியூஷன் படிக்கும் பெண்களை நான் பாலியல் வன்கொடுமை செய்ய  நீ உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். பாலாஜியை தன்னுடன் பேச வைக்க எந்த எல்லைக்கும் போகத் துணிந்த சஞ்சனா, தன்னிடம் படிக்க வந்த மாணவிகளை பாலாஜி பாலியல் வன்கொடுமை செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். அதனால், தன்னிடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவி ஒருவளை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூட்டிக் கொண்டு போய் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார். அங்கு பாலாஜி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

Abuse

அதுமட்டுமின்றி, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை எடுத்து இணையதளத்தில் போட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதே போல, அங்குப் பயிலும் மாணவிகள் அனைவரையும் ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

Abuse

அன்று சஞ்சனா வெளியே அழைத்து சென்று பாலாஜியிடம் விட்ட பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனையடுத்து, காவல்துறையினர் பாலாஜி மற்றும் சஞ்சனாவை உடனடியாக கைது செய்து அவர்களின் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவிகளுக்கும் பெண்களுக்கும் தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள், அதில் ஈடுபடுபவர்களுக்கு உரியத் தண்டனை வழங்கப் படாதது தான் காரணம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், ஐடிஐ மாணவர்கள் இருவர் பலி!

தஞ்சாவூர் திருவையாறு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஐடிஐ மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு...

கொரோனா வந்தவர்களையும் விட்டுவைக்காத பிரேசிலின் மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ்!

இங்கிலாந்து கொரோனா, ஜப்பான் கொரோனா, தென் ஆப்ரிக்கா கொரோனா, நியூயார்க் கொரோனா என புதிது புதிதாக மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் கிருமிகள் எல்லாம்...

பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு கமல்ஹாசன் அவசர ஆலோசனை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன....

திருமணத்தை மீறிய உறவில் இந்திய பெண்களே அதிகம்! அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!!

இந்தியாவில் திருமணமான பெண்கள் தங்கள் கணவருக்கு தெரியாமல் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவது க்ளீடன் என்ற இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
TopTamilNews