Home இந்தியா "மாசம் ஒரு லட்சம் சம்பளம்  இவருக்கு  பத்தலையாம்"-  குறைந்த வருமானத்தால் குடும்பத்தை கொலை செய்த இன்ஜினீயர்  தற்கொலை..

“மாசம் ஒரு லட்சம் சம்பளம்  இவருக்கு  பத்தலையாம்”-  குறைந்த வருமானத்தால் குடும்பத்தை கொலை செய்த இன்ஜினீயர்  தற்கொலை..

பிறகு இறந்து கிடந்த  நான்கு பேர்களின் சடலங்கள் அவர்களது வீட்டின் படுக்கையறையிலிருந்து   மீட்கப்பட்டுள்ளன.அந்த என்ஜினீயர் தான்  தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 40 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் வருமானம் போறாததால்  தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும்  தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் எல்.பி.நகரில் உள்ள ஹஸ்தினாபுரத்தில் இருக்கும் அவரின் வீட்டில் நடந்தது. பிறகு இறந்து கிடந்த  நான்கு பேர்களின் சடலங்கள் அவர்களது வீட்டின் படுக்கையறையிலிருந்து   மீட்கப்பட்டுள்ளன.அந்த என்ஜினீயர் தான்  தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.சனிக்கிழமை முதல் குடும்பத்தினர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பதால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தபிறகு  இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. 

representative image

ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து இறந்த என்ஜினியர் பெயர்  பிரதீப், அவரது மனைவி சுவாதி (35) மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் கல்யாண் கிருஷ்ணா (6) மற்றும் ஜெய கிருஷ்ணா (2) என்று விசாரணையில் தெரிந்தது .இந்த கொலை-தற்கொலைக்கு  நிதி சிக்கல்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் சடலங்களை  உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணையைத் தொடங்கினர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

14 மிமீ உயரத்தில் தங்க ‘டார்ச் லைட்’ சின்னம்… படைத்த தொண்டரை வாழ்த்திய கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த தொண்டர் மணிகண்டன். கைவினைக் கலைகளில் சிறப்புவாய்ந்தவரான இவர் 14 மிமீ உயரத்தில் கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை தங்கத்தில் வடிவமைத்திருக்கிறார். உலகிலேயே மிக...

“பணமும் தரேன் ,என் உடம்பையும் தரேன்” -காதலனை கொல்ல பெண் பேசிய டீலிங் .

கள்ள காதலியை கல்யாணம் செய்து கொள்ள விடாமல் தடுத்த வாலிபரை அந்த பெண் கூலிப்படையால் கொன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது

காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?

முதல்வருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பாலியல் புகார் கொடுத்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்தார்....

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி… நெல்லை மாவட்டத்திற்கு துணை ராணுவம் வருகை…

நெல்லை தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, நேற்று நெல்லை மாவட்டத்திற்கு மத்திய துணை பாதுகாப்பு படையினர் வந்தடைந்தனர். தமிழகத்தில் வரும்...
TopTamilNews