Home ஆன்மிகம் மாங்கல்ய பலன் தரும் ஆடி அமாவாசை விரதம்!

மாங்கல்ய பலன் தரும் ஆடி அமாவாசை விரதம்!

எல்லா விரத தினங்களுமே முக்கியம் தான் என்றாலும், ஏன் குறிப்பாக அமாவாசையையும், பெளர்ணமியையும் முக்கியமான விரத நாட்களாக கொண்டாடுகிறோம். தந்தையை இழந்தவர்கள் நிச்சயமாக கடைபிடிக்க வேண்டிய விரத தினமாக அமாவாசை இருக்கிறது. தாயை இழந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதமாக பெளர்ணமி இருக்கிறது.

மாங்கல்ய பலன் தரும் ஆடி அமாவாசை விரதம்!

எல்லா விரத தினங்களுமே முக்கியம் தான் என்றாலும், ஏன் குறிப்பாக அமாவாசையையும், பெளர்ணமியையும் முக்கியமான விரத நாட்களாக கொண்டாடுகிறோம். தந்தையை இழந்தவர்கள் நிச்சயமாக கடைபிடிக்க வேண்டிய விரத தினமாக அமாவாசை இருக்கிறது. தாயை இழந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதமாக பெளர்ணமி இருக்கிறது. இது தெரியாமல், தாயை இழந்தவர்களும் கூட அமாவாசையன்று தர்ப்பணம் தருகிறார்கள். இது தவறு. நிச்சயம் தந்தை உயிருடன் இருப்பவர்கள் அமாவாசையன்று தர்ப்பணம் தரக் கூடாது. 

god

அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாடு செய்பவர்கள் மட்டுமே, விரதம் இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். இதுவும் தவறான பார்வை தான். சுமங்கலிப் பெண்கள் அமாவாசைக்கு முன்தினம் இரவு கீழ்வரும் இந்தக் கதையைப் படித்து, மறுநாள் அமாவாசையன்று விரதமிருந்து தேவியை வழிபட்டால், மாங்கல்ய பலன் கூடும் என்பது ஐதீகம். 
ஒரு நாட்டின் அரசன் இருந்தான். அவனுக்கு எல்லா செல்வமும் வளமும் நிறைந்திருந்தது. ஆனாலும், குழந்தைப்பேறு மட்டும் இல்லாததால் பெரிதும் வருத்தத்தில் இருந்தான். குழந்தைப்பேறு வேண்டி, தீர்த்த யாத்திரைகளும், ஆலய வழிபாடுகளும் மேற்கொண்டான். இறைவனது அருளால் அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இறைவனது அருள்பார்வை தம் மீது பட்டதை உணர்ந்து, அரசனும், அரசியும் சேர்ந்து இறைவனுக்கு நன்றியுரைத்தார்கள். அப்போது அசரீரி ஒன்று கேட்டது.
உன்னுடய மகன் எல்லா கலைகளையும் கற்று சிறப்பாக வளர்வான். ஆனால், இளம்பருவம் வந்ததும் அவன் மரணமடைந்து விடுவான் என்றது. அசரீரியின் குரலால் வருத்தமடைந்த அரசன், மீண்டும் புனித யாத்திரைகள் சென்றான். வழிநெடுகிலும் இருக்கும் ஆலயங்களைத் தரிசித்து தனது மனக்குறையைப் போக்க வழிபட்டான்.  

marriage

ஒருமுறை காளி கோயிலில் மனம் உடைந்து அவன் வழிபட்டபோது அவன் மீது மனமிறங்கிய காளி தேவி, அவன் முன் தோன்றினாள். கவலைப்படாதே அவ்வாறு உன் மகன் இறந்துவிட்டால், அவனுக்கு திருமணம் செய்துவை. அவனுடைய மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்த்தெழுவான் என்றாள். அரசனும் காளியின் அருளால் மகிழ்ந்து நாடு திரும்பினான். இளவரசன் வளர்ந்து இளமைப்பருவம் வந்த போது, பெற்றோரை இழந்து உறவினர்களால் துன்புறுத்தப்படும் பெண் ஒருத்தி, மாங்கல்ய பலம் கொண்டவள் என்பதை அறிந்து, அவளை இளவரசனுக்கு மணமுடித்து வைத்தார்கள்.  அன்று இரவு இருவரையும் காட்டுக்குள் விட்டு விட்டு எல்லோரும் நாடு திரும்பினார்கள். மறுநாள் அவன் இறந்து போன உண்மை தெரிந்ததும் அழுதாள். அனைத்து தெய்வங்களின் பெயர்களையும் சொல்லி கதறினாள். அவளது கதறலில் மனமிறங்கிய பார்வதி தேவி, ஈஸ்வரனின் அனுமதியோடு அவனை உயிர்த்தெழ செய்தாள். இளவரசனும் அவன் மனைவியும் மகிழ்ந்தார்கள். இந்த சம்பவம் நடந்தது ஆடி மாத அமாவாசை தினத்தில்.  

god

இந்த கதையை அமாவாசைக்கு முன் தினம் இரவு  படித்து விட்டு, மறுநாள் அமாவாசை விரதம் இருந்தால், பெண்களுக்கு மாங்கல்ய பலன் கூடும் என்பது ஐதீகம்.

மாங்கல்ய பலன் தரும் ஆடி அமாவாசை விரதம்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை – 16 இலக்க எண் , சிவிவி எண் இனி வேண்டாம்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் நபரா நீங்கள்? இது உங்களுக்கான செய்தி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது சமீபகாலமாக ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் வங்கிக்கு சென்று பணம் எடுத்து...

வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா? ஜிஎஸ்டி கூட்டம் முக்கியமா? அமைச்சர் பிடிஆரை வறுத்தெடுக்கும் பாஜக

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பொறுப்பற்ற முறையில் அவள் பதிலளித்தார் என்று நெட்டிசன்கள் வலைதளங்களில்...

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9...

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது? முக்கிய அறிவிப்பு இதோ!!

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ளது. தொற்று பாதிப்பை குறைக்க மத்திய , மாநில அரசுகள் முயற்சி எடுத்து வரும் நிலையில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து...
TopTamilNews