Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் மலச்சிக்கல், செரிமான பிரச்சினையா! உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்!

மலச்சிக்கல், செரிமான பிரச்சினையா! உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்!

இரவு நேரங்களில் அதிக அளவில் நான் வெஜ் அயிட்டம் சாப்பிட்டிருந்தால் சொல்லவே வேண்டாம். இப்போதுள்ள அவசர உலகத்தில் பலரும் சாப்பிடும்போது நிதானமாக மென்று ,ரசித்து உமிழ் நீரோடு சேர்த்து சாப்பிடுவதில்லை!

மலச்சிக்கல், செரிமான பிரச்சினையா! உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்!

சிலர் ஜிம்முக்கு போகாமலே செம ஃபிட்டாக இருப்பார்கள். அவர்களை அறியாமலே தொப்பை போட்டிருக்கும். அதுகூட அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள். நீண்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திக்கும் நண்பர்கள் யாராவது ‘என்ன மச்சி…லைட்டா தொப்பை போட்டிருச்சு போல !?’ என்று கேட்ட பிறகுதான் சம்பந்தப்பட்ட நபருக்கே அது தெரிய வரும்.

Constipation 5

பொதுவாக இந்த மாதிரி திடீர் தொப்பைகளுக்கு காரணம், வயிற்றில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்ததால் அல்ல. கண்ணை மூடிக்கொண்டு ஒரு ஃபிளாஷ் பேக் ஓடவிட்டுப் பாருங்கள். கடந்த சில மாதங்களாக நீங்கள் அதிகம் சாப்பிட்ட உணவுகளை வரிசைப் படுத்திப் பார்த்தால் உங்களுக்கே தெரிந்து விடும். வழக்கத்திற்கு மாறான உணவுகள் அதிகம் சாப்பிட்டிருப்பீர்கள். அதிலும் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் நேரம் கடந்த நேரங்களில் ஹெவியான உணவுகளை சாப்பிட்டிருப்பீர்கள்.

eat

அந்த மாதியான நாட்களில் அடுத்த நாளிலிருந்து நேரத்திற்கு சாப்பிட ஆரம்பித்திருப்பீர்கள். இந்த உணவு பழக்கத்தில் மாற்றங்கள் நிகழும் போது வயிறு உப்பியது போல் காணப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் நான் வெஜ் அயிட்டம் சாப்பிட்டிருந்தால் சொல்லவே வேண்டாம். இப்போதுள்ள அவசர உலகத்தில் பலரும் சாப்பிடும்போது நிதானமாக மென்று ,ரசித்து உமிழ் நீரோடு சேர்த்து சாப்பிடுவதில்லை!

eat

இன்னும் சிலர் சாப்பிடும் போது பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். சிலர் மாத்திரை விழுங்குற மாதிரி சாப்பாட்டுக்கு நடுவே அதிகளவில் தண்ணீரையும் குடிப்பார்கள். இதுதான் இளந்தொப்பை விழ காரணம். இப்படியான பழக்கம் உள்ளவர்களுக்கு முதலில் சாப்பிட்ட உணவு முழுவதுமாக செரிமானம் ஆகாது. அப்படி செரிமானம் ஆகாமல் போனால், உடலில் சேர்ந்த கழிவுகள் முழுவதுமாக வெளியேறாது.

அப்படி வெளியேறாத கழிவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து இரைப்பையின் ஒரு பகுதியில் சேர்ந்துவிடும். இதனால் முன்பு போல் பசி இருக்காது. இதனால் வயிறு உப்பலாக காணப்படும். இதைத்தான் கேஸ்டிக் ப்ராப்ளம் என்று சொல்வார்கள். இந்த மாதியான உடல் கோளாறு உள்ளவர்கள் அலோபதி மருத்துவத்திற்கு போக வேண்டிய அவசியமில்லை!

Gooseberry

பெரிய நெல்லிக்காய் 12. உண்மையிலேயே பெரிய நெல்லிக்காயாக இருக்கிற மாதிரி வாங்கிக்கொள்ளுங்கள். காலையில் இந்த நெல்லிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு மிக்சியில் முதலில் தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் மாதிரி அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதோடு அரைத்த பேஸ்ட்டும் தண்ணீரும் சேர்ந்து ஒரு லிட்டர் அளவு வருகிற மாதிரி தண்ணீர் சேர்த்து மறுபடியும் அரைத்து ஜூஸ் மாதிரி வந்ததும் எடுத்து அப்படியே குடிக்க வேண்டும். உப்பு சேர்க்க வேண்டாம். குடிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அப்படியே சாப்பிட்டால் நல்ல பலன் இருக்கும்.

Gooseberry 1

அவசியம் உப்பு சேர்த்தால்தான் குடிக்க முடியும் என்று நினைத்தால் சிறிதளவு உப்பு சேர்த்துக்கலாம். முக்கியமான இரண்டு கண்டிஷன் – இந்த நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். அதுக்கப்புறம் இதை சாப்பிடும் நாட்களில் பிற்பகல் இரண்டு மணிவரை வீட்டைவிட்டு வெளியில் போகிற வேலை இருந்தால் அந்த வேலையை, அதற்கப்புறம் இருக்கிற மாதிரி பார்த்துக்கங்க. இல்லை,ஓய்வாக இருக்கிற நாட்களில் இதை செய்து பாருங்க.

இந்த பிரச்சினை ரொம்ப நாளாவே இருக்கென்று  சொன்னால் தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்களாவது குடிக்க வேண்டியிருக்கும். இப்படி செய்வதன் மூலம் உடலிலுள்ள மொத்த கழிவுகளும் வெளியேறிவிடும். காற்றில் பறப்பது போல் உணர்வீங்க!

மலச்சிக்கல், செரிமான பிரச்சினையா! உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கணவனை ஏமாற்றிவிட்டு… புதுமணப்பெண்ணை கடத்திய தோழி!

ஆம்பூர் அருகே திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன புதுமணப்பெண் அவரது தோழியால் கொல்கொத்தா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில்...

ஒரேநாளில் 546 பேர் உயிரிழப்பு…தினசரி அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் 3,13,32,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி” – அமைச்சர் சேகர் பாபு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் சிறிய கோவில்கள் முதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இந்து கடவுள்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

இந்து மத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மை சமூகத்தின் உரிமை...
- Advertisment -
TopTamilNews