Home தமிழகம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72 ஆவது பிறந்தநாள்... பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72 ஆவது பிறந்தநாள்… பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72 ஆவது பிறந்தநாள்... பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் ஜெயலலிதாவின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் மக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப் படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சட்டசபையில் அறிவித்திருந்தார். அதே போல அதற்கான அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டது. 

ttn

அதன் படி இன்று தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. முதல்வர் ஏற்கனவே அறிவித்ததன் படி இன்று மனிதச் சங்கிலி நிகழ்ச்சி, பேரணி மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ttn

இன்று காலை சென்னை கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் நடைபெற உள்ள குழந்தைகள் தின பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72 ஆவது பிறந்தநாள்... பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிப்பு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18+ முன்பதிவு செய்வது அவசியம்” : மதுரை மாநகராட்சி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதை...

மகாராஷ்டிராவை சூறையாடும் கனமழை; 136 பேர் மரணம்!

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட மழை பாதிப்புகளால் நேற்று மாலை வரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது....

தமிழ்நாட்டில் நூலகங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு!

போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகங்கள் இன்று முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கணவனை ஏமாற்றிவிட்டு… புதுமணப்பெண்ணை கடத்திய தோழி!

ஆம்பூர் அருகே திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன புதுமணப்பெண் அவரது தோழியால் கொல்கொத்தா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில்...
- Advertisment -
TopTamilNews