Home தமிழகம் மருந்து கடைக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு.. கொரோனாவால் உயிரிழந்ததாக பரவும் வதந்தி!

மருந்து கடைக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு.. கொரோனாவால் உயிரிழந்ததாக பரவும் வதந்தி!

கொரோனாவால் தான் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. 

கொரோனா வைரஸ் குறித்து நாள் தோறும் புதிது புதிதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வலிப்பால் உயிரிழந்த ஒருவர், கொரோனாவால் தான் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. 

ttn

மதுரை மாவட்டம் சொக்கலிங்க நகர் பகுதியில் வசித்து வந்த முதியவர் ஜெகநாதன், இரண்டு நாட்களுக்கு முன்னர் மருந்து வாங்க கடைக்கு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அவருக்கு வலிப்பு வந்து விட்டதால் சிறிது நேரத்தில் அவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருக்கிறது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவ, முதியவர் கொரோனா வைரஸ் முற்றியதால் தான் ரோட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக வதந்தி பரவி வருகிறது. 

ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால் தவித்து வரும் மக்களிடையே, இத்தகைய வதந்திகள் பெரும் பீதியை ஏற்படுத்தும். அதனால் இத்தகைய வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவுக்கு பலிகொடுத்த 7 நாடுகள்!

கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்தாலும், பல நாடுகளில் கடுமையாக அதிகரிக்கிறது. மேலும், சில நாடுகளில் இரண்டாம் அலை கொரோனா பரவல்...

சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம் : அச்சத்தில் மக்கள்!

வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயலால் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தீவிர புயலாக இருக்கும் நிவர், அதிதீவிர புயலாக மாறி நள்ளிரவு அல்லது...

இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா? யார் தெரியுமா?

கொரோனாவின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் கொடூரமாக வெளிப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 1 லட்சத்து  5 ஆயிரத்து 740 பேர். இன்றைய...

போலீசை கால் ஷுவை நக்க வைப்போம் – பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். அவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று அவரையும் அவரது திரிணாமுல் கட்சியையும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Do NOT follow this link or you will be banned from the site!