Home தமிழகம் மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியுமா?- உயர்நீதிமன்றம் கேள்வி

மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியுமா?- உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் பெற்று, கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்காக அரசின் ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிக்க முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியுமா?- உயர்நீதிமன்றம் கேள்வி
மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியுமா?- உயர்நீதிமன்றம் கேள்வி

7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் அடிப்படையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டிய வாய்ப்புக் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், அந்த வாய்ப்பினை நிராகரிக்க நேர்ந்த, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் இலக்கியா மற்றும் தர்ஷினி ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கச் செய்தால் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றும், அரசு பள்ளி மாணவர்கள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முடிந்த பின் கிடைக்கும், 160 இடங்களில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், 12 இடங்கள் கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்தது. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 17 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியுமா?- உயர்நீதிமன்றம் கேள்வி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

அடுத்த வாரத்திலிருந்து “அன்னை தமிழில் அர்ச்சனை” – சூப்பர் தகவல் சொன்ன அமைச்சர் சேகர்பாபு!

சென்னை பிராட்வேயில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என எப்போதும் விமர்சனம்...

3ஆவது அலை வந்துவிடுமோ? – அச்சம் கொள்ளும் ஓபிஎஸ்; தனிக்கவனம் செலுத்த முதல்வருக்கு கோரிக்கை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தொற்றின்‌ தாக்கம்‌ குறைந்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு, கட்டுப்பாடுகளுடன்‌ கூடிய ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும்‌, வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌,...

ஜூலையில் ரூ.1 லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வரி வசூல்… பொருளாதாரம் மீண்டெழுவதற்கான அறிகுறி!

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி ரூபாய்...

“சாகுற வர நான் கன்னடிகானு சொன்னருவரு இப்போ தமிழடிகாவா ஆயிட்டாரா?” – அண்ணாமலையுடன் வம்பிழுக்கும் சீமான்!

சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி 90 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தோர் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு மாற்றப்பட்டனர்....
- Advertisment -
TopTamilNews