மன்னித்து விடு சுஜித்… பிக் பாஸ் பிரபலங்களின் பதிவு!

5 நாட்கள் போராட்டத்திற்கு மத்தியில் நேற்றிரவு 2.30 மணியளவில் சுஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சுஜித் இறப்பு குறித்து சேரன் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான்.  5 நாட்கள் போராட்டத்திற்கு மத்தியில் நேற்றிரவு 2.30 மணியளவில் சுஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்குப் பிறகு  இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. 

sujith

இந்நிலையில் சுஜித்தின் இறப்பு குறித்து பிக் பாஸ் பிரபலங்கள் உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.  இயக்குநர்  சேரன் வெளியிட்டுள்ள பதிவில்,  ‘விழிப்புணர்வின் விதையானாய்..விடைகொடுக்கக்கூட நாங்கள் அருகதையற்றவர்கள்..முடிந்தால் மன்னித்துவிடு இம்மண்ணில் பிறப்பித்த கடவுளை…..’என்று பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kavin M (@kavin.0431) on

 

 

 

அதேபோல் பிக் பாஸ் கவினோ, நியாயம் இல்லாத மரணம் என்றும் நடிகை  கஸ்தூரியோ, நாம் மீண்டும் ஒரு சுர்ஜித் வில்சனை இழக்க மாட்டோம். விழிப்புணர்வு தேவை. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்  கடைப்பிடிக்கப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  இதே போல் தர்ஷன், சாண்டி, சாக்ஷி,  நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் சுஜித் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Most Popular

தீவிரவாதிகளால் தொண்டர் தாக்கப்பட்ட சில மணி நேரத்தில் கட்சியிலிருந்து விலகிய காஷ்மீர் பா.ஜ.க. தலைவர்கள்

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசம் பட்கம் மாவட்டம் மொஹிண்ட்போரா கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஹமீது நஜார். அவர் பா.ஜ.க. கட்சியில் உறுப்பினராக உள்ளார். நேற்று காலையில் தீவிரவாதிகள் அப்துல் ஹமீது நஜார்...

இந்த வாரம் பணவீக்கம், நிதிநிலை முடிவுகள் போன்றவற்றை கவனிச்சுகோங்க.. பங்குச் சந்தை நிபுணர்கள் அட்வைஸ்

இந்த வாரம் பேங்க் ஆப் பரோடா, டைட்டன் கம்பெனி, பி.பி.சி.எல்., ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் என்.டி.பி.சி., எய்ஷர் மோட்டார்ஸ் மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூன் காலாண்டு...

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு.. உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது.. சிவ சேனா

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய திரைப்பட உலகில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கான...

கர்நாடக சுகாதார துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக சுகாதார துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பி.ஸ்ரீராமுலு டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், தொற்று நோய்க்கான அறிகுறிகளை இருந்ததால், கொரோனா வைரஸ் பரிசோதனை...