Home உலகம் மனைவிக்கு வேலை கொடுங்க! பிரபல இயக்குநரிடம் கெஞ்சும் இளவரசர் ஹாரி!! 

மனைவிக்கு வேலை கொடுங்க! பிரபல இயக்குநரிடம் கெஞ்சும் இளவரசர் ஹாரி!! 

பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் மனைவிக்காக திரைப்பட இயக்குநரிடம் வேலை கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் மனைவிக்காக திரைப்பட இயக்குநரிடம் வேலை கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்க்கல் விலகியதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டத்தை இழந்த ஹாரி- மேகன் தம்பதிகள் தற்போது கனடாவில் வசித்துவருகின்றனர்.

Harry

இந்நிலையில் இளவரசர் ஹாரி, தனது மனைவி மேகனுக்கு வேலை வழங்குமாறு லயன் கிங் படத்தின் இயக்குநரிடம் ஹாரி கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் படத்தில் யாருக்காவது பின்னணி குரல் கொடுக்கும் வேலை இருந்தால் மேகனுக்கு தருமாறு ஹாரி கேட்கிறார். பின்னணி குரல் கொடுப்பதில் மேகன் அனுபவம் பெற்றவர் என்றும் ஹாரி வலியுறுத்துகிறார். அவர்களது அருகில் மேகனின் தோழியாகிய பிரபல பாடகி பியான்ஸ் நின்றுக்கொண்டிருந்தார். அவர் ஹாரியின் பேச்சை கேட்க முடியாமல் வருத்ததில் நிற்கிறார். இந்த வீடியோவை பார்த்த அரச குடும்ப உறுப்பினர்கள் கடும் மன வேதனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Most Popular

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

ஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் யுத்தம் போல மாறிவிட்டது. பஞ்சாப் – டெல்லி போட்டியில் சூப்பர் ஓவர் சென்றது. பெங்களூரு – ஹைதரபாத் போட்டியில் கடைசி ஓவர்...

ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க 6 விதமான கருவிகள்: மெக்கானிக் நாகேந்திரன் சாதனை

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி மீட்பு நடவடிக்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் நாகையை சேர்ந்த மெக்கானிக் நாகேந்திரன்.

பெற்ற தாயுடன் சேர்ந்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கடந்த ஜூலை மாதம் போக்ஸோ சட்டத்தின் கீழ் நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார். 15 வயது சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல்...

தேர்தல் களம்: திரை மறைவில் உருவாகிறது மூன்றாவது கூட்டணி!

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளாக அதிமுக., திமுக இருந்து வருகின்றன. தேர்தல் சமயங்களில் இவர்கள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவார்கள். மத்தியிலும், வட மாநிலங்களிலும் பெரிதாகப் பேசப்படும் பாஜக...
Do NOT follow this link or you will be banned from the site!