Home தேர்தல் களம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம்: அசத்தும் தேர்தல் ஆணையம்!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம்: அசத்தும் தேர்தல் ஆணையம்!

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை நடைபெறவுள்ள  நாடாளுமன்ற தேர்தலில்  மனநலம் சரியில்லாதவர்களும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம்: அசத்தும் தேர்தல் ஆணையம்!

சென்னை:  தமிழகம் மற்றும் புதுவையில் நாளை நடைபெறவுள்ள  நாடாளுமன்ற தேர்தலில்  மனநலம் சரியில்லாதவர்களும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

vote

 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறவுள்ளது. 

kmc

இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் வாக்களிக்கும் முறையை  தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கொண்டு வந்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள  192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கான அடையாள அட்டை , வாக்கு சீட்டு என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவர்கள் வாக்களிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். 

satya

இது குறித்து கருத்து  தெரிவித்துள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, எங்கள் குழுவினர் அங்கு சென்று வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்களிக்கும் பயிற்சியையும் கொடுத்தனர்.  வாக்களிக்க மனநல மருத்துவமனையின் உள்ளேயே வாக்குச்சாவடி அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புதிய முயற்சியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் வாசிக்க: தர்பார் அப்டேட் : ரஜினிக்கு எதிராக களமிறங்கிய பிரபல நடிகையின் முன்னாள் காதலர்!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம்: அசத்தும் தேர்தல் ஆணையம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்!

உயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...

பெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...

நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்!

விருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு கிளம்பி சென்றனர்.
- Advertisment -
TopTamilNews