மத்திய பிரதேசத்தில் ஜெயின் துறவியை வரவேற்க குவிந்த மக்கள்…. திட்டி தீர்த்த நெட்டின்சன்கள்…

மத்திய பிரதேசத்தில் ஜெயின் துறவியை வரவேற்க மக்கள் குவிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவடத்தில் உள்ள பந்தா நகருக்கு நேற்று முன்தினம் ஜெயின் துறவி பரமன்சாகர் தனது 22 சீடர்களுடன் வந்தார். அவரை வரவேற்க ஏராளமான மக்கள் வீதிகளுக்கு வந்தனர். துறவியை பார்க்கும் எண்ணத்தில் மக்கள் சமூக விலகலையும், முன்எச்சரிக்கை நடவடிக்கையான மாஸ்க்கும் அணிய வேண்டும் என்பதையும் கடைப்பிடிக்கவில்லை.  

ஜெயின் துறவியை வரவேற்க குவிந்த மக்கள்

துறவியை வரவேற்க மக்கள் குவிந்தது தொடர்பான படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பலத்த சர்ச்சை மற்றும் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. டிவிட்டர்வாசிகள் மக்கள் கூடியதை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற கூட்டங்களை தவிர்க்க மகாராஜ் ஜி கடுமையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மக்கள் தங்களது மன திறனை இழந்துவிட்டார்களா? என பலவிதமாக பலரும் மக்கள் கூடியதை கண்டித்து இருந்தனர்.

ஜெயின் துறவியை வரவேற்க குவிந்த மக்கள்

இந்த விவகாரம் தொடர்பாக சாகர் ஏ.எஸ்.பி. பிரவீன் பூரியா கூறுகையில், இது தொடர்பாக விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடியது தொடர்பாக விசாரிக்கவும், சமூக விலகல் மற்றும் செக்சன் 144 விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் அமைப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Most Popular

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...

பா.ஜ.க. அரசின் மோசடிகள் ஹரியானாவை திவால் நிலைக்கு தள்ளுகின்றன… காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹரியானாவின் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள் மாநிலத்தை திவால் நிலைக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினார்....
Do NOT follow this link or you will be banned from the site!