Home இந்தியா மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி அதிகரிக்க வாய்ப்பு!

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி அதிகரிக்க வாய்ப்பு!

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ராணுவத்துக்கான செலவினம் மத்திய பட்ஜெட்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் ராணுவ நவீனமயமாக்கல் நடவடிக்கை மேலும் தாமதமாகும் என தகவல் கசிந்துள்ளது.

130 கோடி இந்தியர்களும் நிம்மதியாக இருப்பதற்கு முக்கிய காரணம் நமது பாதுகாப்பு படைகள்தான். இரவு, பகல் பாராது எல்லையில் ராணுவத்தினர் காவல் காப்பததால்தான் நம்மால் கவலை இல்லாமல் இருக்க முடிகிறது. நமது ராணுவத்தின் கணிசமான பகுதியினர் பாகிஸ்தான் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவ்வப்போது குடைச்சல் கொடுத்தும் வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய-சீன எல்லை பகுதியில் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

போர் விமானம்

கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், ராணுவத்தை நவீனமயமாக்கும் நோக்கிலும் ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு கணிசமாக உயர்த்தி வருகிறது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு பாதுகாப்பு துறைக்கு ரூ.4.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கியது. இது சென்ற நிதி ஆண்டை காட்டிலும் 6.6 சதவீதம் அதிகமாகும். இருந்தாலும் இது ராணுவத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைக்கு போதாது என கருத்து எழுந்தது.

நீர்மூழ்கி போர்கப்பல்

ஏனென்றால், இப்பம் இந்திய விமான துறையில் உள்ள விமானங்கள் எல்லாம் அதர பழசு. இவற்றுக்கு மாற்றாக பல 100 நவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வாங்குவது அவசியம். மேலும், இந்திய கடல் எல்லையில் சீனாவின் தனது ஆதிக்கத்தை தடுக்க நமக்கு குறைந்தபட்சம் 12 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் தேவை. ராணுவத்துக்கும் நவீன துப்பாக்கிள் முதல் நவீன டிரோன்கள் என  அனைத்தும் தேவைப்படுகிறது. இவற்றை வாங்க அதிக நிதி தேவை. இதனால் இடைக்கால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி காணாது என பலர் கூறினர்.

நவீன துப்பாக்கி

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய 2019-20ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதியை இடைக்கால பட்ஜெட்டை காட்டிலும் சிறிது அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், போதி நிதி இல்லாததால் ராணுவ நவீன மயமாக்கல் நடவடிக்கை மேலும் தாமதம் ஆகலாம் என தெரிகிறது.  

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்

மதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது...

7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது

சென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...

டெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்

விவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...
Do NOT follow this link or you will be banned from the site!