Home இந்தியா மத்தியபிரதேசத்தில் போலீஸ் அதிகாரிக்கு கொரோனா – குற்றவாளியை கைது செய்தபோது நோய்த் தொற்று பரவியது

மத்தியபிரதேசத்தில் போலீஸ் அதிகாரிக்கு கொரோனா – குற்றவாளியை கைது செய்தபோது நோய்த் தொற்று பரவியது

குற்றவாளியை கைது செய்தபோது போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவியது.

போபால்: குற்றவாளியை கைது செய்தபோது போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவியது.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி, நர்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நோயாளியைக் கைது செய்ய ஒரு குழுவுடன் சென்றார். அதன் பின்பு அந்த போலீஸ் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை ஏப்ரல் 20-ஆம் தேதி காவல்துறை அதிகாரிகள் குழு கைது செய்தது. ஜாவேத் கான் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் ஏப்ரல் 7-ஆம் தேதி இந்தூரில் ஒரு கான்ஸ்டபிளைத் தாக்கியதற்காக மேலும் 3 பேருடன் கைது செய்யப்பட்டு என்எஸ்ஏ கீழ் குற்றம் சாட்டப்பட்டார். அவரும் மேலும் ஒரு குற்றவாளியும் ஜபல்பூரில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர். மற்ற இருவர் சட்னாவில் ஒரு சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஜாவேத் கான் உட்பட 3 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது.

cop

ஜாவேத் கான் ஏப்ரல் 11-ஆம் தேதி ஜபல்பூரின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் ஏப்ரல் 19 அன்று தப்பிச் சென்றார். ஆனால் அவரது தப்பிக்கும் திட்டத்தை போலீசார் முறியடித்து ஒரு சோதனைச் சாவடியில் கைது செய்தனர். ஜபல்பூர் கலெக்டர் பாரத் யாதவ் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட காவல்துறை அதிகாரிகள் விரைவில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் 2017 பேட்ச்சை சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பில்லை.

Most Popular

நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை

பஞ்சாப் காங்கிரசார் தனது உருவ பொம்மையை எரித்தற்கு, நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? என்று அவர்களுக்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதா கொண்டு வர வேண்டும்.. மத்திய அரசுக்கு நிஷிகாந்த் துபே வேண்டுகோள்

பொது சிவில் சட்டம், மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதாக்களை கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே வேண்டுகோள் விடுத்தார்.

விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்… மத்திய பிரதேச அரசு

பி.எம். கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நஷ்டம் ரூ.10 கோடியை தாண்டியது

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.10.61 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த ஜூன்...
Do NOT follow this link or you will be banned from the site!