Home இந்தியா மது பாட்டில்களை பால் கேன்களில் கடத்த முயன்ற பலே ஆசாமி..... கைது செய்த டெல்லி போலீசார்

மது பாட்டில்களை பால் கேன்களில் கடத்த முயன்ற பலே ஆசாமி….. கைது செய்த டெல்லி போலீசார்

டெல்லியில் மது பாட்டில்களை பால் கேன்களில் கடத்த முயன்ற உத்தர பிரதேச ஆசாமியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் அவர்களை காட்டிலும் குடிகாரர்களின் நிலைமைதான் மிகவும் மோசமாக இருப்பது போல் தெரிகிறது. மது கிடைக்காததால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மதுகடைகளில் திருட்டு முதல் சமையல் கியாஸ் சிலிண்டர்களில் மதுபாட்டில்களை மறைத்து வைத்தது என பல சுவராஸ்யமான செய்திகள் வெளியே வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது பால்கேன்களில மது பாட்டில்களை கடத்த முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மதுபான கடை

புதுடெல்லியில் சவுத் அவென்யூ பகுதியில் போலீஸ் சோதனை தடுப்பு உள்ளது. இரு சக்கர வாகனத்தில் பால் கேன்களுடன் வந்த ஒருவர் அந்த போலீஸ் சோதனை சாவடி பகுதியில் வேகமாக சென்றார். இது அங்கு இருந்த போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் விரட்டி சென்று பைக்கில் சென்றவரை பிடித்தனர். பின் அவரது பால்கேன்களை சோதனை செய்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

பிடிபட்ட பாபி சவுத்ரி

அந்த கேன்களில் 750 மி.லி. கொண்ட மொத்தம் 7 மதுபாட்டில்கள் (அதில் ஒன்று உடைந்து இருந்தது) இருந்தன. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் அவர் உத்தர பிரதேசம் புலந்த்ஷாரில் வசிக்கும் பாபி சவுத்ரி என தெரியவந்தது. பாபி சவுத்ரி மீது  தொற்று நோய் சட்டம், டெல்லி கலால் சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

தா.பாண்டியன் நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன்..ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறுநீரக பாதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை...

தளி அருகே கிணற்றில் தவறி விழுந்து தாய், மகன் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள...

தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம்… சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் நல்ல...

பரபரப்பை ஏற்படுத்திய ’பியாங்’வழக்கு: கொடூரக்காரி காயத்ரிக்கு தண்டனை என்ன?

மூன்று வயது மகனை நல்லபடியாக வளர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று மியான்மரில் இருந்து சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்கு சென்ற பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தி சாப்பாடு போடாமல் சித்திரவதை செய்து அடித்து...
TopTamilNews