மதுரை, திருப்பூரை தொடர்ந்து சென்னை வருகிறார் பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காகப் பிரதமர் மோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வரவுள்ளார்.

சென்னை: மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காகப் பிரதமர் மோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வரவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.  சமீபத்தில்  பிரதமர் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து  திருப்பூர் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து டிஎம்ஸ்- வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைத்ததுடன் திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.

இந்நிலையில் தேதி பிரதமர் மோடி மக்களவை  தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 6-ம்  சென்னை வரவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சென்னையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

மேற்கு டெல்லியில் இரண்டு நாட்களுக்கு(ஆகஸ்ட்- 4) முன்பு 12 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் (டி.சி.டபிள்யூ) வியாழக்கிழமை டெல்லி போலீசாருக்கு...

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...