Home தமிழகம் மதுக்கடைகளை மூடிவிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடுமா என்ன? ரஜினியின் கருத்துக்கு திருமா பதிலடி

மதுக்கடைகளை மூடிவிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடுமா என்ன? ரஜினியின் கருத்துக்கு திருமா பதிலடி

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 43 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, டாஸ்மாக்குகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  

ttn

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

 

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வழக்கம்போல நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கருத்து விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. முழுஅடைப்பின்போது  மதுக்கடைகளைத் திறந்த தமிழக அரசை அவரால்  வெளிப்படையாகக் கண்டிக்க இயலவில்லையே ஏன்? மதுக்கடைகளை மூடிவிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடுமா என்ன? #ரஜினி #மதுக்கடை” எனக்குறிப்பிட்டுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

நிவர் புயல் எதிரொலி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை சைதாப்பேட்டை,...

லாக்டவுனுக்கான அறிகுறியா? குஜராத், ம.பி., ராஜஸ்தானை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் இரவு ஊரடங்கு அமல்

குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து இமாச்சல பிரதேச அரசும் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. நம் நாட்டில் கொரோனா...

நெருங்கி வரும் ‘நிவர்’ புயல் : சென்னையிலிருந்து 470 கிமீ தொலைவில் மையம்!

சென்னையிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலைகொண்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து 440 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது....

அசாமில் பசுக்களுக்கு தனி மருத்துவமனை ஆரம்பம்… பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் பசு பாசம்

வடகிழக்கு மாநிலங்களில் முதலாவதாக அசாமில் பசுக்களுக்காக தனி மருத்துவமனை ஒன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு அதிக...
Do NOT follow this link or you will be banned from the site!