Home க்ரைம் மதம் மாற கட்டாயப்படுத்தி கொடூர தாக்குதல் ! 15 வயது சிறுவன் பலியான பரிதாபம் !

மதம் மாற கட்டாயப்படுத்தி கொடூர தாக்குதல் ! 15 வயது சிறுவன் பலியான பரிதாபம் !

கிறிஸ்துவ மதத்திற்கு மாறவில்லை எனக்கூறி விடுதி வார்டனால் மாணவர் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் திரிபுரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிறிஸ்துவ மதத்திற்கு மாறவில்லை எனக்கூறி விடுதி வார்டனால் மாணவர் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் திரிபுரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பபியாச்சாரா ஹோலி கிராஸ் பள்ளி விடுதி வார்டன் கொடுமைபடுத்தியதாக கூறி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த மாணவரின் பெயர் ஹாப்பி தேபர்மா

christian

இதுகுறித்து நீதி விசாரணை நடத்த திரிபுரா மாநிலம் உத்தரவிட்ட நிலையில் விடுதி கண்காணிப்பாளரால் கொடூரமாக தாக்கப்பட்டதால் மாணவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தற்போது விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவனின் தாய் கொடுத்த புகாரில் கிறிஸ்தவ பள்ளியின் பாதிரியார்களையும் வார்டன் ஹலமையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

விடுதி வார்டன் லஹம் ஏழை மாணவர்களை மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்ததும், சம்பவத்தன்று மாணவரை மதம் மாறுமாறும் வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவனை சிசிடிவி இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று தனிமையில் உட்கார வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மாணவர் மயங்கி விழுந்துள்ளார். இந் விஷயம் பள்ளி பொறுப்பாளர் பாதிரியார் லென்சி டிசோசாவுக்குத் தெரிந்தே நடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு மாணவரை அழைத்து சென்ற பாதிரியார் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என மற்ற மாணவர்களை மிரட்டி உள்ளனர். மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது சுவாச அமைப்பு, இதயம் மற்றும் நுரையீரலில் கடுமையான உள் காயத்தையும் அதனால் ஏற்பட்ட சேதத்தையும் கண்டறிந்தனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவர் அனைவரிடமும் சொல்லி உள்ளார். பள்ளி விடுதிகளில் உள்ள மற்றவர்கள், பாதிரியார்கள் மற்றும் ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்டோர் மதம் மாற வற்புறுத்தி சித்திரவதை செய்ததையும் கூறியுள்ளனர். கடந்த ஆண்டும் ஒரு மாணவி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு இதேபோன்ற அழுத்தம்தான் காரணம் என்று கூறப் பட்டது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வலுப்பெறும் புரெவி புயல் : எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது . தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த...

19 ஆண்டுகளில் 290 புலிகளை இழந்த மத்திய பிரதேசம்… 5 சதவீத புலிகள் வேட்டையில் பலி..

மத்திய பிரதேசத்தில் கடந்த 19 ஆண்டுகளில் 290 புலிகள் இறந்துள்ளன. இதில் 5 சதவீத புலிகள் மட்டுமே மனிதர்களின் வேட்டைக்கு பலியாகி உள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் காலவரையற்ற ஸ்டிரைக்.. டாக்சி யூனியன்கள் மிரட்டல்

விவசாயிகளின் கோரிக்கைகளை 2 நாட்களுக்குள் நிறைவேற்றவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசுககு டெல்லி என்.சி.ஆர். டாக்சி யூனியன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேற்கு வங்கத்தில் பெற்றோர்களின் சடலடத்துடன் வீட்டுக்குள் பல நாட்கள் வசித்த பெண்… பக்கத்து வீட்டினர் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் ஒரு பெண் தனது இறந்து போன பெற்றோர்களின் சடலத்துடன் பல நாட்கள் வசித்து வந்த சம்பவம் அண்டை வீட்டார்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!