Home உணவு மட்டன் ருசிக்க மட்டும் ஒரு உணவகம். நெல்லை மாயாண்டி மட்டன் ஹோட்டல்!

மட்டன் ருசிக்க மட்டும் ஒரு உணவகம். நெல்லை மாயாண்டி மட்டன் ஹோட்டல்!

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் இருக்கும் கேலக்ஸி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கிறது இந்த ஸ்பெஷாலிட்டி உணவகம்.
சாப்பாடு நூறு ரூபாய்தான்.அந்த நூறு ரூபாய்க்கு அன்லிமிட்டட் மட்டன் மீல்ஸ் தருகிறார்கள் இங்கே.
சைட்டிஷ்களாக,இரத்தப்பொரியல்,மட்டன் ஃபிரை,குடல் கறி ஒரு அவித்த முட்டை இவளவும் தருகிறார்கள்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் இருக்கும் கேலக்ஸி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கிறது இந்த ஸ்பெஷாலிட்டி உணவகம்.
சாப்பாடு நூறு ரூபாய்தான்.அந்த நூறு ரூபாய்க்கு அன்லிமிட்டட் மட்டன் மீல்ஸ் தருகிறார்கள் இங்கே.
சைட்டிஷ்களாக,இரத்தப்பொரியல்,மட்டன் ஃபிரை,குடல் கறி ஒரு அவித்த முட்டை இவளவும் தருகிறார்கள்.
எப்படி என்றால் இரண்டு காரணங்கள்,ஒன்று இந்த உணவகத்தை நடத்தும் இளைஞர்கள் ஒரு மட்டன் ஸ்டாலும் நடத்துகிறார்கள்.

food

அதனால் ஆட்டு ரத்தத்துக்கு பஞ்சமில்லை.அதேபோல் தனிக்கறி ( போன்லெஸ் ) மட்டன் வாங்குபவர்களால் எலும்புகளுக்கும் பஞ்சமில்லை.
இரண்டாவது காரணம் அவர்களின் நல்ல மனசு.
சாதாரணமாக, நான்-வெஜ் ஹோட்டல்களில் சைட்டிஷ் என்கிற பெயரில் அன்று மார்க்கெட்டில் விலை குறைவாக இருக்கும் ஏதாவது ஒரு காய்,பெரும்பாலும் அது பீட்ரூட்,கூடவே ஒரு கீரையும் தருவார்கள்.
இங்கே அது போன்ற காமெடிகள் எதுவும் கிடையாது.

food

அதேபோல,ஒரே மசாலாவைப் போட்டு ஒரே சுவையில் தரப்படும் சிக்கன்,மீன் என்று வேறு வேறு பெயர்களில் தருகிற வழக்கமும் இல்லை.ஒன்லி மட்டன்.ஆடு சம்பந்தமில்லாத ஒரே சைட்டிஷ் அவித்த முட்டை மட்டும்தான் தருகிறார்கள்.
நல்ல தாராளமான இடம்.ஒரு வாழைஇலை போட்டு ஆவி பறக்கச் சோறு பரிமாறுகிறார்கள்.
தனித் தனி கப்களில் மட்டன்,இரத்தப் பொரியல்,போட்டி யுடன் ஒரு முட்டை வைக்கப்படுகிறது.
நேராக மட்டன் குழம்புதான்.நிறைய எலும்புகளும்,சின்னச் சின்ன கறித்துண்டுகளுமாக சூடான மட்டன் குழம்பு.அசல் கிராமத்தின் சுவையும் மனமும் நம் மூக்கையும் வயிற்றையும் நிறைக்கிறது.

food

ரத்தப்பொரியல் திருநெல்வேலி உணவுகளுக்கே உரிய தனிச்சுவையுடன் இருக்கிறது,அதை லேசாக ருசிபார்த்து விட்டு கடைசியாக சாப்பிடப்போகும் ரசம் சோற்றுக்காக ஒதுக்கி வையுங்கள்.
போட்டியும் செமி கிரேவியாகத்தான் இருக்கிறது. அதையும் சோற்றில் கலந்தே சாப்பிடலாம்.மட்டன் ஃப்ரையும் அதிக மசாலாக்காள் இல்லாமல் நன்றாக வெந்து தனித்த சுவையுடன் இருக்கிறது.
நீங்கள் எவளவு டீசெண்ட் பார்ட்டியாக இருந்தாலும் முதல் முறை வைத்த சோற்றுடன் எழுந்துவிடாமல் கட்டிப் போடுகிறது அந்த கறிக்குழம்பின் சுவை.மூன்று முறை கேட்டாலும் அதே அளவு சோறும் குழம்பும் தருகிறார்கள்

food

போதும் என்று முடிவு செய்யும் போது ஒரு கைப்பிடி சோற்றில் அவர்கள் தரும் ரசத்தை ஊற்றி குழைய பிசைந்து இரத்தப் பொரியலைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு முடியுங்கள்.

Most Popular

கோட்டை பெருமாள் கோவிலில் 31 ஆயிரம் உண்டியல் காணிக்கை

கோட்டை பெருமாள் கோவிலில் ஸ்ரீவாரி உண்டியலில் பக்தர்கள் ரூ.31 ஆயிரம் காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள். ஈரோடு கோட்டை பெருமாள்...

கோவை அண்ணா காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

வியாபாரிகளிடம் முறைகேடாக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வரும் கோவை அண்ணா காய்கறி மார்க்கெட் குத்தகைதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் மார்க்கெட் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில்...

பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருட்டு: பக்கத்து கல்லாவில் இருந்த 7 லட்சம் தப்பியது

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், ஆயில் மில் ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் அய்யனார்(40). இவர், நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்று விட்டார். நேற்று...

ஸ்டாலினை நாங்கள் முதல்வராக்குவோம்- காங்கிரஸ்

ஸ்டாலின் முதல்வராக தமிழக காங்கிரஸ் பாடுபடும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். சட்டபேரவை தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக...
Do NOT follow this link or you will be banned from the site!