Home இந்தியா மட்டன் சூப்பில் சயனைடு...திரைப்படங்களை மிஞ்சும் சீரியல் கொலைகள்: அதிர வைக்கும் பின்னணி இதோ!

மட்டன் சூப்பில் சயனைடு…திரைப்படங்களை மிஞ்சும் சீரியல் கொலைகள்: அதிர வைக்கும் பின்னணி இதோ!

ஜூலி  தாமஸ் என்பவர் மட்டன் சூப்பில் சயனைடு கொடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா: ஜோலி  தாமஸ் என்பவர் மட்டன் சூப்பில் சயனைடு கொடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோலி  தாமஸ். இவர் தாமஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவருடன் இணைந்து வாழ பிடிக்காமலிருந்து வந்துள்ளார். அப்போது மாமனாரின் அண்ணன்  மகன் சாஜு மீது ஜூலிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதே எண்ணம் மணவாழ்க்கை பிடிக்காததால் சாஜுவிற்கும் இருந்ததால், தாங்கள்  இணைந்து வாழ தடையாக உள்ள மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார் ஜோலி .

MURER

அதன்படி  நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பரிடமிருந்து  சயனைடு வாங்கியுள்ளார். ஜோலி  குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு 2002ஆம் ஆண்டு மட்டன் சூப்பில் சயனைடை கலந்து கொடுத்துள்ளார்.  இதன் முறையே  2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும் 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் கொலை செய்துள்ளார். ஜோலியின் நடவடிக்கையில் சந்தேகம் பட்ட அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவையும் இதே பாணியில் தீர்த்து கட்டியுள்ளார் . இதன்பின்னர் இறுதியாக 2016ஆம் ஆண்டு காதலன் சாஜுவின் மனைவி மற்றும் 10 மாத பெண் குழந்தைக்கும் மட்டன் சூப் கொடுத்து கொலை செய்துள்ளார்.

JOLLY

திருமணத்திற்குத் தடையாக இருந்த மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டிவிட்ட நிம்மதியில் ஜோலி   மற்றும் சாஜூ 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.  குடும்பத்தில் தொடர் மரணங்கள், மனைவி இறந்து ஒரு வருடத்தில் சாஜு -ஜோலி  திருமணம் செய்து கொண்டது என பல்வேறு சந்தேகங்கள் உறவினர்கள் மத்தியில் எழுந்தது. 

 

JOLLY

இதையடுத்து வெளிநாட்டிலிருந்த ஜோலியின் முதல் கணவரின் சகோதரர் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்கள்  மீது சந்தேகம் இருப்பதாகப் போலீசில் புகார் கொடுக்க, ஜோலியின் உறவினர்களும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் கல்லறைகளைத் தோண்டி எடுத்த போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து ஜோலி, அவரது 2வது கணவர் சாஜு, நகைப்பட்டறை ஊழியரை பிடித்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.  அதில் 6 பேரையும் கொன்றதை ஜோலி  ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.  ஜோலி  வெவ்வேறு இடங்களில் இருந்து சயனைடுகளை வாங்கியதாகவும் தெரிகிறது.  மேலும்  பலமுறை கருக்கலைப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளதால் அவர் பல ஆண்களுடன் நெருங்கிய தொடர்பில்  இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலை சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...

திடீர் உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார்...

50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம்! 20 தான் முடியும் என்கிறது திமுக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின்...
TopTamilNews