Home அரசியல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்: கமல்ஹாசன் அதிரடி!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்: கமல்ஹாசன் அதிரடி!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் 3 பேரை நீக்கம் செய்து கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் 3 பேரை நீக்கம் செய்து கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கி அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். மக்களுடனான சந்திப்பு என்ற பெயரில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளராக இருந்த இமாம் ஹாசன் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக மக்கள் நீதி மய்யத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

mnm

அவர் மட்டுமின்றி, அவர் சம்பந்தப்பட்ட அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மேலும் இரண்டு பேரையும் நீக்குவதாகவும் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisment -

மாவட்ட செய்திகள்

Most Popular

தெலுங்கானாவிற்கு டெல்லி அரசு ரூ.15 கோடி நிதியுதவி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தெலுங்கானாவிற்கு டெல்லி அரசு ரூ.15 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால்...

கிராமத்தைச் சுற்றி கம்பிவேலி அமைக்கும் சிப்காட்: கருப்பு கொடி ஏற்றி எழுதிங்கள்பட்டி மக்கள் போராட்டம்

எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று எழுதிங்கள்பட்டி கிராமத்தைச் சுற்றி சிப்காட் நிர்வாகம் கம்பிவேலி அமைக்கும் முயற்சியைக் கண்டித்து கிராமமக்கள் கருப்புக்கொடி ஏற்றி வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெருந்துறை வட்டாரத்தில்...

ஊட்டி- தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

ஊட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவத்தில் 3 பேரை வனத்துறையினர் கைதுசெய்தனர். ஊட்டி அடுத்த...

‘பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என விமர்சித்த முன்னாள் முதல்வர்’ : நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

மத்திய பிரதேச மாநில இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சனம் செய்ததற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!