Home தொழில்நுட்பம் ‘மக்களின் கார்’ டாடா நானோ கார்கள் உற்பத்தி நிறுத்தம்!

‘மக்களின் கார்’ டாடா நானோ கார்கள் உற்பத்தி நிறுத்தம்!

மும்பை: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.

‘மக்களின் கார்’ டாடா நானோ கார்கள் உற்பத்தி நிறுத்தம்!

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு நானோ காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் தொடக்க விலையாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக உலகின் மிக விலை குறைந்த கார் என்ற பெருமையை டாடா நானோ பெற்றது. மக்களின் கார் என்று விளம்பரம் செய்யப்பட்ட இந்தக் காரின் விற்பனை அமோகமாக இருந்தது. விலை குறைவான கார் என்பதால் மக்களிடம் அதிக வரவேற்பையும், கவனத்தையும் எளிதில் பெற்றது.

இந்நிலையில், விற்பனை குறைவு காரணமாக நானோ ஹேட்ச்பேக் மாடல் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 275 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ஜூனில் ஒரே ஒரு யூனிட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் நானோ கார் உற்பத்தி முழுமையாக கைவிடப்படவில்லை என்றும், முன்பதிவு அடிப்படையில் குஜராத்தில் உள்ள சனந்த் தயாரிப்பு ஆலையில் டாடா நானோ கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘மக்களின் கார்’ டாடா நானோ கார்கள் உற்பத்தி நிறுத்தம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

குழந்தையை பெற்றெடுத்த மறுநாளே… கொரோனாவால் பெண் காவலர் பரிதாப பலி!

சென்னையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த மறுநாளே கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும்...

சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது… ரூ.15 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம்...

கேரளாவுக்கு லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரி குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்தமுயன்ற 10 டன் ரேஷன் அரிசியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி...

“வரலாறு படைத்துள்ளீர்கள்” – ஹாக்கி கேப்டனுக்கு சர்ப்ரைஸ் கால் செய்து வாழ்த்திய பிரதமர் மோடி!

ஹாக்கியை உருவாக்கியது என்னவோ இந்தியா தான். ஆனால் நம்மிடம் ஆட்டத்தைக் கற்றுக்கொண்டு உலகின் பல நாடுகள் சர்வதேச அரங்கில் நம்மை விஞ்சி நிற்கின்றனர். நாமோ காலிறுதிக்குள் செல்வதே பெரும் சாகசமாக...
- Advertisment -
TopTamilNews